- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் குமாரின் அடுத்த திரைப்படத்திற்கு இவர் தான் இயக்குனர்... அவர்தான் இசையமைப்பாளர்... அப்படின்னா தரமான ஒரு...

அஜித் குமாரின் அடுத்த திரைப்படத்திற்கு இவர் தான் இயக்குனர்… அவர்தான் இசையமைப்பாளர்… அப்படின்னா தரமான ஒரு கேங்ஸ்டர் கதையை எதிர்பார்க்கலாமா?…

- Advertisement -

அஜித் குமார் தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் அவர் பங்கேற்று உள்ளார். இந்த கார் பந்தயங்கள் முடிய கிட்டதட்ட ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதன் பிறகு அக்டோபர் மாதத்தில் தான் அவர் தனது புதிய திரைப்படத்தை ஆரம்பிக்க உள்ளார்.

தற்போது அவர் நடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இது ரிலீஸ் ஆகும் சூழலில் அதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

இதில் ஒன்றாக, இந்த மாத இறுதியில் அதாவது 27 அல்லது 28 ஆகிய தேதியில் படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வேறு லெவலில் வந்திருப்பதாகவும், நிச்சயம் இது அஜித் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த ட்ரீட்டாக அமையும் என்றும் பலர் கூறி வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இதற்குப் பின்னணி இசை அமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் படத்தை யார் இயக்க போகிறார் என்பதுதான் தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்த ரேஸில் முதல்முறையாக இடம் பெற்றவர் விஷ்ணுவர்தன். ஏற்கனவே இவர் அஜித் குமாரை வைத்து பில்லா ஆரம்பம் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இதனால் இவர் தான் அஜித் குமாரின் அடுத்த திரைப்படத்தை எடுப்பார் என்று பலரும் பேசினார்கள்.

- Advertisement -

இதுகுறித்து பேட்டி அளித்த விஷ்ணுவர்தன், படத்திற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஆனால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதே போல் வெங்கட் பிரபுவும் அஜித் குமாரின் படத்தை எடுக்க இருப்பதாக கூறினார்கள். இது போக, மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன், போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் பிரபு உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இருந்தார்கள்.

இந்த சூழலில் தான் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கார்த்திக் சுப்பராஜ் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர் தற்போது சூர்யாவை வைத்து ரெட்ரோ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி இது திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பின்னர் அஜித் குமாருடன் அவர் இணைந்து படம் எடுக்க இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் தான் இதற்கும் இசையமைக்க உள்ளாராம்.

- Advertisement -

சற்று முன்