- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் பட டிரெய்லரை பார்த்து கார்த்திக் சுப்புராஜ் போட்ட ட்வீட். சூப்பர் ஸ்டாரின் ரசிகன் என்பதை...

ஜெயிலர் பட டிரெய்லரை பார்த்து கார்த்திக் சுப்புராஜ் போட்ட ட்வீட். சூப்பர் ஸ்டாரின் ரசிகன் என்பதை காண்பிச்சிட்டாரு

- Advertisement -

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள “ஜெயிலர்” திரைப்படமானது எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பாகியுள்ளது.

இந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் என பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகயுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த வேளையில் முழுவதுமாக ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்ரெய்லரை படக்குழு நேற்று மாலை வெளியிட்டிருந்தது.

- Advertisement -

இந்த ட்ரைலரை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரது சமூகவலைதள பக்கத்தின் மூலம் பாராட்டியுள்ளார். அதில் “வாவ் தலைவா ஒவ்வொரு நொடியும் புல்லரிக்கிறது” வாழ்த்துக்கள். தலைவரின் தரிசனத்தை காண காத்திருக்க முடியவில்லை. ஆகஸ்ட் 10-ஆம் தேதி விரைவாக வந்துடு என ட்வீட் செய்துள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து “பேட்ட” என்கிற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான இவர் ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரைலரை வாழ்த்தி தனது பதிவினை வெளியிட்டு அவர் ஒரு சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்