- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... பேட்ட திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் சிறிய கேமியோ ரோலில் வந்தாரா... அட அதை அவரே...

என்னது… பேட்ட திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் சிறிய கேமியோ ரோலில் வந்தாரா… அட அதை அவரே சொல்லி இருக்காருங்க… ஆச்சரியத்தில் ரஜினி ரசிகர்கள்….

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. சூர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூலில் இது எந்தவித குறையும் வைக்கவில்லை. ஒட்டு மொத்தமாக இந்த திரைப்படம் 104 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இது மட்டும் அல்லாமல் பல முக்கியமான திரைப்படங்களையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இதில் அவரது இரண்டாவது திரைப்படமான ஜிகர்தண்டா மிக முக்கியமான படம் என்றே கூறலாம். மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

அதிலும் அந்த திரைப்படத்தில் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் வாழ்ந்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜை வாழ்த்தினார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்தக் கதாபாத்திரத்தை தனக்கு வழங்கியிருக்கலாமே என்றும் அந்த நேரத்தில் அவர் கேட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் அவரை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க ஒரு ரசிகர் ரஜினி திரைப்படத்தை இயக்கியிருந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் பேட்ட திரைப்படம் அமைந்தது.

- Advertisement -

படத்தில் ஒவ்வொரு சீனிலும் ரஜினியை அழகாக காட்டி அசத்தியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். மாஸ் காட்சிகளும் சண்டைகளும் தெறிக்கும் வகையில் அந்த திரைப்படம் இடம்பெற்று இருந்தது. 2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அந்த திரைப்படத்துடன் விஸ்வாசமும் வெளியாகி இருந்தது. இரண்டும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தன. இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கேமியோ ரோலில் வந்திருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

தனது தந்தையும் ரஜினி சாரும் ஒரே பைக்கில் செல்வது போன்ற காட்சி படத்தில் இடம்பெற்றிருக்கும். நாங்கள் மற்றொரு பைக்கில் அதனை படம் பிடித்தோம். அப்போது காட்சிகள் இப்படி வேண்டும் என கூறிக்கொண்டு நானும் இன்னொரு பைக்கில் பயணித்தேன். அப்போது தான் எனக்கு தோன்றியது இந்த பிரேமில் நாமும் இருக்கலாமே என்று. உடனடியாக ரஜினி சார் இருந்த பைக்கை நான் கிராஸ் செய்வேன். அது கேமரா காட்சியில் பதிவாகி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் கூறிய காட்சியை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்