- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்பவே சர்ச்சையை கிளப்பிய கருணாநிதி நூற்றாண்டு விழா, முதல்வர் ஸ்டாலின் செவிகளுக்கு இந்த தகவல் செல்லுமா,...

இப்பவே சர்ச்சையை கிளப்பிய கருணாநிதி நூற்றாண்டு விழா, முதல்வர் ஸ்டாலின் செவிகளுக்கு இந்த தகவல் செல்லுமா, விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு

- Advertisement -

சினிமா நடிகர் ,நடிகையர் பங்கேற்கும் ஒரு முக்கிய விழா, வரும் டிசம்பர் 24ம் தேதி நடைபெற, ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி என ஸ்டார் நடிகர்கள் எல்லாம் இந்த விழாவில் கலந்துக்கொாள்ள இருக்கின்றனர்.

வழக்கமாக நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் தான் இதுபோன்ற சினிமா கலைஞர்கள் பங்கேற்கும் விழா நடக்கும். ஆனால், டிசம்பர் 24ல் நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் முக்கிய விளையாட்டு போட்டி இந்த விழா, சேப்பாக்கம் திறந்தவெளி மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

இந்நிலையில், இந்த விழா டிசம்பர் 24ம் தேதி, இது கருணாநிதியின் அரசியல் எதிரியாக கருதப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவு நாளாகும். அதுமட்டுமல்ல, டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், 24ம் தேதி இரவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் துவங்கி விடும். அதனால், கிறிஸ்தவ மதம் சார்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவருக்கும் இது அதிருப்தியான விஷயம்தான்,

அதுமட்டுமின்றி விஜய், கிறிஸ்தவ மதம் சார்ந்தவர் என்பதால் அதையே காரணமாக சொல்லி, அவர் விழாவில் பங்கேற்பதை தவிர்க்கலாம். அதே போல் அஜீத்குமார் மனைவி ஷாலினியும் கிறிஸ்தவ மதம் சார்ந்தவர் என்பதால், அஜீத்குமார் கிறிஸ்துமஸ் விழாவில் பிஸியாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால், கருணாநிதி நூற்றாண்டு விழாவை தவிர்க்க இதுவே காரணமாகும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி, கிறிஸ்துமஸ் விழாவுக்கு முந்தைய நாளான இரவில் எல்லோருமே அந்த பண்டிகையை எதிர்கொள்ளவும், அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கும்போது, கருணாநிதி நூற்றாண்டு விழாவை நேரடியாக ஒளிபரப்பினால் அக்கறையாக பார்ப்பார்களா என்பதும் கேள்விக்குறிதான்.

அதுமட்டுமின்றி, இன்னும் ஆறு மாதங்களில் பார்லிமென்ட் தேர்தல் வருகிறது. அதனால் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள், நினைவு நாளை அதிமுகவினர் பெரிய அளவில் நடத்துவது வழக்கம். இப்போது சென்னை முழுக்க எம்ஜிஆர் நினைவு நாளில் திமுக தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்காக கொடி, பேனர்கள் என அலப்பரை காட்டினால் அதுவும் எம்ஜிஆர் தொண்டர்களை, ரசிகர்களை குறிப்பாக அதிமுகவினருக்குள் தேவையற்ற மனக்கசப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த தகவல்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் காதுகளுக்கு சென்றால், நிச்சயமாக இந்த விழா தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளது என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்