- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் மழைவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் விழாவா, அவசரமாக தலையாட்டி மறுத்த திமுக; வரும் டிசம்பர்...

மக்கள் மழைவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் விழாவா, அவசரமாக தலையாட்டி மறுத்த திமுக; வரும் டிசம்பர் 24ல் நடக்க இருந்த விழா ஒத்திவைப்பு – மீண்டும் நடப்பது எப்போது?

- Advertisement -

முன்னாள் முதல்வர் கருணாநிதியில் 100வது ஆண்டுவிழாவை திமுகவினர் பல மாதங்களாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு பொதுக்கூட்டங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சார்பில் கருணாநிதி 100 விழா என்ற பெயரில், சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 24ம் தேதி மெகா அளவில் விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. பிரபல பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உட்பட பிற மாநில சினிமா துறையினரும் பங்கேற்கும் வகையில் இவ்விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துக்கொள்வது உறுதியான நிலையில் விஜய், அஜீத்குமார் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது. விஜய் அரசியலுக்கு தயாராகி வரும் நிலையில் திமுகவினர் பங்கேற்கும் இவ்விழாவில் கலந்துக்கொள்வாரா என்ற குழப்பம் நீடித்தது. இயன்றவரை அவர் வராமல் தவிர்ப்பதே, தேவையின்றி

அதுமட்டுமின்றி நடிகர் அஜீத்குமாரும் இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதை பல ஆண்டுகளாகவே தவிர்த்து வருகிறார். அவரது படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் கூட அவர் பங்கேற்காத நிலையில், கருணாநிதி 100 விழாவுக்கு வருவாரா என்ற சந்தேகமும் பலருக்கும் ஏற்பட்டது.

- Advertisement -

இதற்கிடையே டிசம்பர் 24ம் தேதி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவு நாளன்று இந்த விழாவை நடத்துவது சரிதானா என்ற விமர்சனமும் எழுந்தது. சேப்பாக்கம் திறந்தவெளியில் விழா என்பதால், அழைப்பிதழ் தரும்போதே ரஜினிகாந்த், இது மழைகாலம், பார்த்து ஏற்பாடுகளை கவனமாக செய்யுங்கள் என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.

இந்த சூழலில் இப்போது மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையே மழைவெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. அதனால் அந்த விழாவை இப்போது நடத்த வேண்டாம் என திமுக தரப்பில் இருந்து சிக்னல் தரப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தரப்பில் வரும் 24ம் தேதி விழா நடக்காது. வரும் ஜனவரி 6ம் தேதிக்கு இந்த விழா மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்