- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்தை ரிலீஸ் செய்வதில் அடுத்தடுத்த நெருக்கடி… நடிகர் சூர்யாவுக்கு இப்படியும் ஒரு சோதனையா? -...

கருப்பு படத்தை ரிலீஸ் செய்வதில் அடுத்தடுத்த நெருக்கடி… நடிகர் சூர்யாவுக்கு இப்படியும் ஒரு சோதனையா? – படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சிங்கம் 2 படம்தான் அவரது வெற்றியை கொண்டாடிய படமாக இருந்தது. அதன்பிறகு இதுவரை 12 ஆண்டுகளாக சூர்யா நடித்த எந்த ஒரு படமும் மாஸ் ஹிட் படமாக இருக்கவில்லை.

நேரடியாக ஓடிடியில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று படங்கள் வணிக ரீதியான வெற்றிப் படங்களாக மட்டுமே இருந்தன. இதற்கிடையே சூர்யா நடித்த அஞ்சான் 24 பசங்க 2 சிங்கம் 3 என்ஜிகே காப்பான் எதற்கும் துணிந்தவன் மாசு என்கிற மாசிலாமணி தானா சேர்ந்த கூட்டம் கங்குவா என 10 படங்களும் தொடர் தோல்வி படங்களாக இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படம் கடந்த 2025ம் ண்டு மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரிலீஸானது. இந்த படம் ரூ. 235 கோடி வரை வசூலித்து வணிக ரீதியாக வெற்றியை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படமும் சிங்கம் கஜினி அயன் படங்களை போல ஒரு வெற்றிப் படமாக இருக்கவில்லை.

ரெட்ரோ படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்தார். இதில் நடிகை திரிஷா நாயகியாக நடித்துள்ளார். இதில் அய்யனார் சுவாமியாகவும் வக்கீல் கேரக்டரிலும் சூர்யா மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த படம் பல மாதங்களாகியும் திரைக்கு வராமல் முடங்கி போயுள்ளது.

- Advertisement -

கருப்பு படத்துக்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்போது மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறார். கருப்பு படம் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது.

ஜனநாயகன் படம் ரிலீஸ் என்று அறிவித்ததால் கருப்பு படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கும் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது ஏப்ரல் 10ம் தேதி கருப்பு ரிலீஸ் என திட்டமிட்டுள்ளனர். ஆனால் சட்டசபை தேர்தல் அறிவித்தால் அந்த தேதியிலும் படம் வெளியிட முடியாது என்பதால், மே 1ம் தேதி ரிலீஸ் என்று முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் 10 அல்லது மே 1 என்ற 2 தேதிகளை முடிவு செய்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்