- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு ரேட் ரூ.15,000... பின்னாடி ஒருத்தன் கிள்ளுனான்... எனக்கு 24 மணி நேரம் போதாது.. கஸ்தூரி...

எனக்கு ரேட் ரூ.15,000… பின்னாடி ஒருத்தன் கிள்ளுனான்… எனக்கு 24 மணி நேரம் போதாது.. கஸ்தூரி பரபரப்பு பேட்டி

- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை கஸ்தூரி. 90களில் அறிமுகமான கஸ்தூரி கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். பின்னர் நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட அவர், 2009ஆம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ் படம்’ என்ற படத்தில் கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

தொடர்ந்து சினிமாவிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவரும் அவர், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தடலாடியாக பதிவிட்டு வருகிறார். அவர் கட்சி பாரபட்சமின்றி அனைவரையும் விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் பிரபல நெறியாளர் நிஜந்தன் உடனான உரையாடல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நடிகை கஸ்தூரி பரபரப்பு பதில்களை தெரிவித்துள்ளார். பேட்டிகளில் பங்கேற்க கஸ்தூரி ரூ.15,000 பெறுவதாக பெண் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதற்கு பதிலளித்த அவர், அந்தப் பெண் 30 நிமிடங்களுக்கு பொய் பேசினார். அந்த பெண் சொன்ன பல விஷயங்களை நான் மறுக்கலாம். ஆனால், அவர் கூறியது போல் இண்டெர்வியூக்கு ரூ.15,000 பீஸ் வாங்குறேன் என்ற ஐடியா நல்லாருக்கு. அதை இப்பவே அமல்படுத்தலாம் என நினைக்கிறேன் என்றார்.

மேலும் பாலியல் தொழில் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி, சலவைத் தொழிலாளி ஒருவன் சீதையை பாலியல் ரீதியாக தவறாக சொல்லியதால், ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பினான். அதையே நாம் ஏற்கவில்லை. ராமரை நாம் திட்டுறோம்.

ஒரு மனிதன் பேசினால் அதை நினைத்து வருந்தலாம். கழுதை பேசியதெல்லாம் பெரியதாக கருத முடியாது. திட்டுறவங்க வாய்தான் சாக்கடைன்னு நினைச்சுட்டு போயிடுனம். ரோடுல போறவங்க திட்டுறதுலாம் கண்டுக்க முடியாது. தினமும் நான் யோக்கியன், பத்தினின்னு பேட்டி கொடுக்க முடியாது. அப்படி கொடுக்க ஆரமிச்சா அதுக்கு 24 மணி நேரம் போதாது.. உண்மையா இருந்த தான் மனது புண் படும். பொய்யை நினைத்து வருந்த வேண்டாம்.

ஒருமுறை நான் ஒரு கூட்டத்தில் இருக்கும்போது பின்புறம் இருந்து ஒருவன் என்னை கிள்ளினான். உடனே அவனுடைய கையை நான் பிடித்ததும் சாரி சிஸ்டர் விட்டுடுங்க என கெஞ்சினான். அவனுடைய தைரியம் எல்லாம் அவ்வளவு தான். இது போன்ற ஆட்கள் தான் பொய்யான தகவல்களை பரப்புவார்கள்.

சினிமா ஒரு பல்கலைக்கழகம். அங்க நிறைய கத்துக்கிட்டேன். ஒரு நிகழ்ச்சியில் என் அப்பாவுடன் சென்றபோது, கூட்டத்தில் ஒருவன் எனது பின் பக்கத்தில் கிள்ளினான். திரும்பி அவனது கையை பிடித்துக்கொண்டேன். இதனால் பயந்து போன அவன், உடனே ‘சிஸ்டர்.. சிஸ்டர்..’ என கெஞ்சினான். இது எவ்வளவே அசிங்கமான விஷயம். சோசியல் மீடியாவில் திட்டுபவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. நிஜ வாழ்வில் தங்களால் செய்ய முடியாமல், வக்கிரமத்தை காட்ட தான் பலர் சோசியல் மீடியாவுக்கு வருகின்றனர். அவர்களுக்கு பொழப்பு இல்லை. அவர்களை நினைத்து எனது நேரத்தை வீணடிக்க முடியாது என்றார்.

சற்று முன்