- Advertisement -
தாராபுரம் இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் கார்த்திகா கைது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது, தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அராஜக போக்குடன் அவரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கார்த்திகா உள்ளிட்ட நாதக கட்சியினர் மீதான கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அதில் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். திமுக தேமுதி அமமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே நாதக கட்சிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இப்போது அதிமுகவும் இந்த விவகாரத்தில் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது.





