- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யை எல்லாரும் அப்படி நினைக்குறாங்க, ஆனா அவர் உண்மையான முகம் எனக்குதான் தெரியும்- பகீர் கிளப்பிய...

விஜய்யை எல்லாரும் அப்படி நினைக்குறாங்க, ஆனா அவர் உண்மையான முகம் எனக்குதான் தெரியும்- பகீர் கிளப்பிய நடிகை கௌசல்யா

- Advertisement -

நடிகை கௌசல்யா தமிழ் சினிமாவில் “காலமெல்லாம் காதல் வாழ்க” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் “நேருக்கு நேர்”, “பிரியமுடன்”, பூவேலி” போன்ற பல திரைப்படங்களில் நடித்த கௌசல்யா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அனைத்து நடிகர்/நடிகைகளுக்கும் அவர்களது கெரியரில் ஒரு சறுக்கல் வருவது இயல்பே. கௌசல்யாவுக்கும் ஒரு கட்டத்தில் சறுக்கல் வந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் அவரது உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரால் பல திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது.

அவரது உடல் எடையும் சற்று அதிகமாக ஆனது. எனினும் தனது உடல் எடையை குறைத்து பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு பக்கம் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார் கௌசல்யா.

கௌசல்யா தனது தொடக்க காலகட்டத்தில் விஜய்யுடன் இணைந்து “நேருக்கு நேர்”, “பிரியமுடன்” போன்ற இரண்டு திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கௌசல்யா, விஜய்யை குறித்த ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

“விஜய்தான் என்னுடைய செலப்ரிட்டி கிரஷ். நான் அவருடன் பிரியமுடன் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் நடித்த இரண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. அந்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.

அதற்கு பிறகுதான் அவரது கெரியரில் முக்கிய கட்டம் தொடங்கியது. அதுவரை விஜய் படங்கள் என்றால் குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள்தான் படமாக்குவார்கள். ஆனால் அந்த வெற்றிக்குப் பின் விஜய்யை வைத்து அதிகளவு பட்ஜெட்டில் படம் தயாரிக்க தயாராக இருந்தார்கள். அதனை என்னிடம் அவர் பகிர்ந்துகொண்டார். நான் அவருக்கு எனது வாழ்த்துகளை கூறினேன். அவர் எனக்கு சாக்லெட் வாங்கிக்கொடுத்தார்.

நேருக்கு நேர் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் மிகவும் இறங்கி வந்து பேசுவார். இப்போதெல்லாம் அவர் ஏதோ அமைதியாகவே இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் விஜய் ஒரு சேட்டர் பாக்ஸ்” என்று ஒரு ஆச்சரிய தகவலை கௌசல்யா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

 

சற்று முன்