- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் கீர்த்தி சுரேஷ்... ஆனால் அந்தப் படத்தை இயக்கப் போவது வேறு ஒருத்தரா......

பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் கீர்த்தி சுரேஷ்… ஆனால் அந்தப் படத்தை இயக்கப் போவது வேறு ஒருத்தரா… இங்கதான் இருக்குது ட்விஸ்ட்…

- Advertisement -

இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருந்த அந்த திரைப்படம், எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன், ரஜினி முருகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கீர்த்தி சுரேஷ். இங்கிருந்து தான் தமிழ் சினிமாவில் அவரது பயணம் ஆரம்பித்தது.

தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து ரெமோ திரைப்படத்தில் நடித்த அவர், வெற்றி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வந்தார். மூத்த நடிகரான விஜய் உடன் கைகோர்த்து பைரவா திரைப்படத்தில் நடித்தார். அதேபோல் ரஜினிகாந்த் உடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில், அவருக்கு தங்கையாக நடித்தார்.

- Advertisement -

தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்து வந்த கீர்த்தி சுரேசிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது மகாநதி திரைப்படம். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. தெலுங்கில் மகாநடி என்னும் பெயரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழில் மகாநதி எனும் பெயரில் வெளியானது.

இந்தத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. இங்கிருந்து, முதன்மை கதாபாத்திரத்தில் தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களை மையப்படுத்திய கதைகளிலேயே நடிக்க ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் இதில் பெரும்பாலான திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தன.

- Advertisement -

குறிப்பாக பென்குயின் என்ற திரைப்படம் எல்லாம் இங்கு வந்தது கூட பலருக்கும் தெரியாது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவர் நடித்த சாணி காயிதம் திரைப்படம் விமர்சன ரீதியாக பேசப்பட்டது. தற்போது அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் வெளியீட்டு தயாராக இருக்கிறது. தொடர்ந்து அடுத்த படத்திலும் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பிரவீன் எஸ் விஜய் எனும் அறிமுக இயக்குனர் இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் மிஷ்கின். இந்த திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

சற்று முன்