- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல காமெடி நடிகர் மகன் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்… அவரோட குருநாதர் யார் தெரியுமா? -...

பிரபல காமெடி நடிகர் மகன் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்… அவரோட குருநாதர் யார் தெரியுமா? – விறுவிறுப்பான லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு லொடுக்கு பாண்டியாக அறிமுகமானவர் கருணாஸ். நந்தா படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. மேடைகளில் கானா பாடல்களை பாடிக்கொண்டிருந்த கருணாஸை காமெடி நடிகராக திரைக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் பாலா. தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து பெரிய அளவில் கருணாஸ் வரவேற்பை பெற்றார்.

அதன்பிறகு திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கதாநாயகனாக அவர் நடித்தார். சில படங்களை அவரே சொந்தமாகவும் தயாரிக்கவும் செய்தார். முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் கட்சியை துவக்கிய அவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார்.

இப்போதும் படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடிகர் தனுஷின் மகனாக நடித்திருந்தார். அதே போல் விடுதலை 2 படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். 2 படங்களிலுமே அவருக்கு நல்ல கேரக்டர்களை வெற்றிமாறன் தந்திருந்தார்.

அது மட்டுமின்றி ஆரம்பத்தில் இருந்தே இயக்குனர் வெற்றிமாறனுடன்தான் கென் கருணாஸ் பயணித்து வருகிறார். அவரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு அவரது ஆலோசனை வழிகாட்டுதலின்படியே செயல்படுகிறார். இந்த சூழலில் அடுத்ததாக நடிகர் கென் கருணாஸ் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.

நடிகர் கருணாஸ் சொந்தமாக தயாரிக்கும் ஒரு படத்தில் அவரது மகன் கென் கருணாஸ் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கான ஆடிஷன் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் இந்த படத்தில் ஹீரோ கேரக்டர் இல்லை. கதையில் வரும் கேரக்டர்களே கதைக்களத்தின் போக்கை தீர்மானிக்கும் விதமான திரைக்கதையில் இந்த படம் உருவாகிறது.

வழக்கமாக நடிகர்களின் மகன்கள் நடிகராக ஜெயிக்க தான் சினிமாவில் ஆசைப்படுகிறார்கள். ஆனால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களம் இறங்கியது போல நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸூம் இப்போது இயக்குனராக களத்தில் இறங்குகிறார். வெற்றிமாறனின் சீடர் என்பதால் நிச்சயமாக இவரும் ஒரு நல்ல படைப்பாளியாக தன்னை நிரூபித்து காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

சற்று முன்