- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரள மாநில அரசின் 54வது சினிமா விருதுகள் அறிவிப்பு, 9 விருதுகளை வென்ற படம் எது...

கேரள மாநில அரசின் 54வது சினிமா விருதுகள் அறிவிப்பு, 9 விருதுகளை வென்ற படம் எது தெரியுமா, போடு வெடிய… உற்சாகத்தில் மலையாள திரைத்துறை!

- Advertisement -

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மாநில அரசுகள் சார்பில், ஆண்டுதோறும் சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இது சினிமாத்துறைக்கும், சினிமா கலைஞர்களுக்கும் கிடைக்கும் அங்கீகாரமும், மரியாதையான அடையாளமுமாக இருக்கிறது.

அதன்படி நேற்று கேரள அரசின் 54வது சினிமா விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. கேரள அரசின் கலாசார விவகார அமைச்சர் சாஜி செரியன் இந்த திரைப்பட விருதுகள் குறித்த பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதில் மலையாளத்தில் வெளியான பல முக்கிய வெற்றி படங்கள் விருதுகளை பெற்றுள்ளதால் மலையாள திரைத்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

அதன்படி 54வது கேரள அரசின் விருதுகள் விவரம் வருமாறு; சிறந்த நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ( ஆடுஜீவிதம்), சிறந்த நடிகைகள் ஊர்வசி ( உள்ளொழுக்கு), பினா ஆர் சந்திரன் ( தடவு), சிறந்த இயக்குனர் பிளஸ்லி (ஆடு ஜீவிதம்), சிறந்த திரைப்படம் காதல் தி கோர் என விருதுகளை வென்றனர். இத்துடன் இந்த ஆண்டு மாநில விருதுகளில் 9 விருதுகளை ஆடுஜீவிதம் படம் வென்றுள்ளது.

மற்ற விருதுகள் விவரம் வருமாறு; சிறந்த நடிகர்கள் ஜூரி விருது கேஆர் கோகுல் ( ஆடு ஜீவிதம்) சுதி கோழிக்கோடு ( காதல்) சிறந்த படம் ஜூரி விருது ககனாச்சாரி, சிறந்த அறிமுக இயக்குனர் – பாசில் ரசாக் ( தடவு) பிரபலமான படம் ஆடுஜீவிதம், நடன இயக்குனர் – விஷ்ணு ( சுலைகா மன்சில்)

- Advertisement -

சிறந்த டப்பிங் பெண் கலைஞர் – சுமங்கலா ( ஜனம் 1947 – பிரணயம் துடருன்னு) சிறந்த டப்பிங் ஆண் கலைஞர் – ரோஷன் மேத்யூ ( உள்ளொழுக்கு), சிறந்த ஒப்பனை கலைஞர் – ரஞ்சித் அம்பாடி ( ஆடுஜீவிதம்) சிறப்பு சப்தம் – ஷமீர் அகமது ( ஓ பேபி), ஒலி வடிமைப்பு – ஜெயதேவ் சக்கடத், அனில் ராதா கிருஷ்ணன் ( உள்ளொழுக்கு) ஒலி கலவை – ரசூல் பூக்குட்டி, சரத் மோகன் ( ஆடுஜீவிதம்)

கலை இயக்கம் – மோகன்தாஸ் ( 2028) எடிட்டிங் – சங்கீதா பிரதாப் ( லிட்டில் மிஸ்) என விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திரைப்பட விருதுகளுக்காக 2 சுற்றுகளாக படங்கள் திரையிடப்பட்டன. முதல் சுற்றில் 160 படங்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதி சுற்றில் 40 படங்களாக குறைக்கப்பட்டன. சமீபத்தில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களும் இந்த விருதுகளுக்கு பரிசீலிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்