- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரையுலக வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட லியோ படத்தின் திரையரங்கு உரிமம்? அதுவும் ரிலீஸுக்கு முன்னாடியே!...

திரையுலக வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட லியோ படத்தின் திரையரங்கு உரிமம்? அதுவும் ரிலீஸுக்கு முன்னாடியே! எவ்வளவு கோடின்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான “மாநகரம்” திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பின் அவர் கார்த்தியை வைத்து இயக்கிய “கைதி” திரைப்படம் தமிழ் திரையுலகை அதிரவைக்கும் அளவுக்கு மாஸ் ஹிட் ஆனது. இதன் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமா உலகமே திரும்பி பார்த்தது.

“கைதி” திரைப்படம் உருவாகும்போதே விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார் லோகேஷ். “மாஸ்டர்” திரைப்படம் விஜய் நடித்ததில் மிகவும் புதுமையான திரைப்படமாக அமைந்தது. மேலும் இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தது ரசிகர்களுக்கு டபுள் மகிழ்ச்சியாக அமைந்தது.

- Advertisement -

“மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து “விக்ரம்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. உலகளவில் சுமார் 400 கோடிகளுக்கும் மேல் “விக்ரம்” திரைப்படம் வசூல் ஆனது.

“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றி, லோகேஷ் கனகராஜை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. மேலும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் என்ற ஒன்றையும் “விக்ரம்” திரைப்படத்தின் மூலம் உருவாக்கியிருந்தார் லோகேஷ்.

- Advertisement -

தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து “லியோ” திரைப்படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருவதால் ரசிகர்கள் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியில் வெளியாகும் இத்திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து “லியோ” திரைப்படம் குறித்து ஒரு மாஸான தகவல் வெளிவந்துள்ளது. விஜய்க்கு எப்போதும் கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதை பலரும் அறிவோம். விஜய் திரைப்படங்கள் கேரளாவில் வெளியானால் தமிழ்நாட்டிற்கு இணையாக அவரது திரைப்படங்கள் கொண்டாடப்படும். கேரளா ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்த வரலாறெல்லாம் உண்டு.

இந்த நிலையில் “லியோ” திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கேரளாவில் இத்திரைப்படம் சாதனை படைத்துள்ளது. அதாவது “லியோ” திரைப்படத்தின் கேரள திரையரங்கு உரிமம் 16 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாம். இதுவரை கேரளாவில் வெளியான திரைப்படங்களை காட்டிலும் அதிக தொகைக்கு விற்கப்பட்ட திரைப்படமாக “லியோ” சாதனை படைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்