- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த காலத்திலும் நடிகை குஷ்பு இப்படி இருக்கிறாரே? பாஜக கட்சி சார்ந்தவர் என்றால் அதற்காக இப்படியா…...

இந்த காலத்திலும் நடிகை குஷ்பு இப்படி இருக்கிறாரே? பாஜக கட்சி சார்ந்தவர் என்றால் அதற்காக இப்படியா… – இணையத்தில் வைரலாகும் குஷ்பு விஷயம்

- Advertisement -

நடிகை குஷ்பு, தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் இருந்தவர். இப்போதும் இவரது படங்களை ரசிகர்கள் ரசிக்கவே செய்கின்றனர். மிக சொற்பமான எண்ணிக்கையில்தான் இப்போது குஷ்பு நடிக்கிறார். டிவி சீரியல்களில் அதிகமாக காணப்படுவதில்லை.

முதலில் திமுகவுக்கு சென்ற குஷ்பு, சில காலம் அங்கு இருந்தார். கனிமொழிக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட குஷ்பு கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து திமுக வை விட்டு குஷ்பு வெளியேறினார்.

- Advertisement -

அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் குஷ்பு, பிரசார மேடைகளில் காணப்பட்டார். ஆனால் காங்கிரஸ்சிலும் அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்றவர்கள் பெரியதாக குஷ்புவை முன்னிலைப்படுத்தவில்லை.

சில ஆண்டுகள் அங்கும் காத்திருந்து நொந்து போன குஷ்பு, காங்கிரஸ்சில் இருந்து விலகி, பாஜகவுக்கு வந்தார். காங்கிரஸ்சில் இருந்த போது பாஜகவை கடுமையான விமர்சித்த குஷ்பு, பாஜகவுக்கு வந்த பிறகு காங்கிரஸை வசைபாடினார். இப்படி திமுக, காங்கிரஸ், பாஜக மூன்று கட்சிகள் தாவி விட்டார் குஷ்பு.

- Advertisement -

பாஜகவில் இப்போது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், பாஜக தன்னை உயர்வான ஸ்தானத்தில் வைத்திருப்பதாக குஷ்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். என்றாலும் அவ்வப்போது திமுகவை பற்றி ஏதேனும் பேசி சர்ச்சையிலும் சிக்கிக்கொள்வது குஷ்புவின் அரசியல் பயணத்தில் தொடர்கிறது.

இந்நிலையில் குஷ்புவின் மாமியார், (சுந்தர் சியின் அம்மா) தெய்வானை சிதம்பரம் பிள்ளை, பிரதமர் நரேந்திர மோடியை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். தனது மாமியாரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், மோடியை அவர் சந்திக்க ஏற்பாடு செய்து சந்திக்க வைத்திருக்கிறார்.

மோடியுடன் தனது மாமியார் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, இந்த சந்திப்புக்கு சம்மதித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார் குஷ்பு. அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்