- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மாதிரியான ஆள் நான் கிடையாது, திடீரென அந்தர் பல்டி அடித்த நடிகை குஷ்பு -...

அந்த மாதிரியான ஆள் நான் கிடையாது, திடீரென அந்தர் பல்டி அடித்த நடிகை குஷ்பு – அவரது இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

- Advertisement -

நடிகை குஷ்பு தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக 1990களில் இருந்தவர். குஷ்புவுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள் என கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், பிரபு என அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்தவர் குஷ்பு.

பல படங்களில் நடிகர் பிரபுவுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் குஷ்பு. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது வதந்தி என கூறப்பட்ட நிலையில், பிறகு இயக்குனர் சுந்தர் சியை குஷ்பு காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

- Advertisement -

10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வந்த குஷ்பு அதன்பிறகு அம்மா, அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு, சினிமா மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்ததால் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அங்கு கனிமொழிக்கு போட்டியாக இவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள, திமுகவினரால் ஓரம்கட்டப்பட்டார்.

அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு போனார். அங்கும் பெரிய அளவில் குஷ்புவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அங்கும் சில ஆண்டுகள் தாக்குபிடித்த குஷ்பு, பிறகு பாஜக பக்கம் வந்தார். அங்கு அவருக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு மேலாக அந்த பதவியில் இருந்தார் குஷ்பு.

- Advertisement -

ஆனால் இப்போது தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் பதவியை குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட குஷ்பு சீட் கேட்ட போது கட்சி தலைமை தர மறுத்ததால் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும், விரைவில் ஏதேனும் வேறு ஒரு கட்சியில் அவர் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்திலும் குஷ்பு ஈடுபட மறுத்து விட்டார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்ததால் கட்சி நிகழ்ச்சிகளில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இனிமேல்தான் கட்சியில் நான் ஆக்டிவ்வாக இருக்க முடியும். தீவிர அரசியலில் ஈடுபட முடியும். இந்த பதவியை விட்டால், கட்சியில் பதவி கிடைக்கும் என்று கணக்குப் போட்டு செயல்படும் ஆள் நான் கிடையாது. கட்சிக்காக கடுமையாக உழைப்பேன். கட்சி பொறுப்பு தொடர்பாக யாரிடமும் நான் பேசவில்லை. எனக்கு என்ன வர வேண்டுமோ, அது உரிய நேரத்தில் எனக்கு வரும், என்று குஷ்பு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்