- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்ளவா? மத்தவங்களுக்கெல்லாம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம்

எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்ளவா? மத்தவங்களுக்கெல்லாம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம்

- Advertisement -

பெரிய திரையில் வெளியாகும் திரைப்படங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மக்களிடம் ரீச் ஆகிறதோ அதற்கு கொஞ்சமும் சளைக்காதது சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்கள். சீரியலில் நடித்தால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரது வீட்டுக்குள்ளும் எளிதாக போய்விடலாம் என்ற நிலைமை பல காலமாக இருக்கிறது. அதனால் சீரியல் நடிகர்களும் சினிமா நட்சத்திரங்கள் அளவுக்கு கொண்டாடப்படுவது வழக்கம்.

பல தொலைக்காட்சிகளில் தற்போது சீரியல்கள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் சீரியல் என்றாலே அதற்கு அடையாளமாக இருப்பது சன் டிவிதான். அந்த சேனலில் ஒளிபரப்பான சித்தி, மெட்டி ஒலி, கோலங்கள், கங்கா யமுனா சரஸ்வதி போன்ற சீரியல்கள் சென்சேஷனல் ஹிட்டடித்தவை. அதன் காரணமாக சன் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் பல வருடங்கள் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது மீண்டும் எதிர்நீச்சல் என்ற சென்சேஷனல் சீரியலை ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது சன் டிவி. கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம்தான் இந்த சீரியலையும் இயக்கியிருக்கிறார். கூட்டுக்குடும்பத்துக்குள் ஒரு ஆணாதிக்க சிந்தனையுடைய அண்ணனும், அவர் சொல் பேச்சு கேட்கும் தம்பிகளையும், அவர்களால் தங்களது கனவுகளையும், ஆசைகளையும் தொலைத்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவர்களது மனைவிகளையும் மையமாக வைத்து இந்த சீரியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிம்ப்பிள் லைனாக இருந்தாலும் திருச்செல்வத்தின் மேக்கிங்கும், ஆர்த்தியின் வசனங்களும், நடிகர்களின் நடிப்பும் அந்த சீரியலை உச்சம் கொண்டு சென்றிருக்கிறது. குறிப்பாக ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாரிமுத்து அதிகளம் செய்துகொண்டிருக்கிறார். இயக்குநராக இருந்து பின்னர் சினிமாவில் நடித்தார் அவர். ஆனால் சினிமாக்களில் நடித்தபோதுகூட அவருக்கு இந்த அளவு ரீச் கிடைக்கவில்லை. எதிர்நீச்சல் சீரியலோ அவரை அனைவரிடமும் அடையாளப்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

அவர் மட்டுமின்றி பிற நடிகர்களும் மிகச்சிறப்பாக தங்களது நடிப்பை வெளிப்படுத்திவருகின்றனர். இந்நிலையில் எதிர்நீச்சலில் நடிக்கும் சிலரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஆதி குணசேகரனாக கலக்கும் மாரிமுத்து ஒருநாளைக்கு 20,000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என கூறப்படுகிறது.

அதேபோல் ஜனனியாக நடிக்கும் மதுமிதாவும், நந்தினியாக நடிக்கும் ஹரிப்ரியாவும், ஞானமாக நடிக்கும் கமலேஷும் 15,000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்கள் என்றும்; கதிராக நடிக்கும் சபரி பிரஷாந்த் மற்றும் ரேணுகாவாக நடிக்கும் ப்ரியதர்ஷினி ஆகியோரு ஒரு நாளை 10,000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்