- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே ஆண்டில் 100 கோடி வருமானம் பார்த்த ஜூனியர் நடிகை மீது ஆவேசம், அரசியல் களத்தில்...

ஒரே ஆண்டில் 100 கோடி வருமானம் பார்த்த ஜூனியர் நடிகை மீது ஆவேசம், அரசியல் களத்தில் குதித்த நடிகை ராதிகா – வெளிச்சத்துக்கு வந்த மர்மங்கள்

- Advertisement -

சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை கடந்த 1996ம் ஆண்டில் நடிகர் சரத்குமார் துவக்கினார். ஆரம்பத்தில் கட்சித் தலைவராக சரத்குமாருக்கு தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்தது. நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு அரசியல் ஆதரவு பெருகியது.

ஆனால் ஒரு கட்டத்தில், அவரது அரசியல் வாழ்க்கையின் புகழ் மங்கத் துவங்கியது. மக்களின் ஆதரவு குறைந்து, சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போதிய ஓட்டுகளை பெற முடியாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தார். சினிமாவிலும் பெரிய அளவில் அவரால் சாதிக்க முடியவில்லை. அவ்வப்போது அப்பா, அண்ணன் கேரக்டரில் நடிக்கத் துவங்கினார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன், சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது. விருதுநகர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக சரத்குமாரின் மனைவி ராதிகா நிறுத்தப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக வேட்பாளராக போட்டியிடுகிறார். அதனால் அந்த தொகுதி முக்கிய தேர்தல் களமாக, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுவரை கிடைக்கிற வாய்ப்புகளில் சினிமாவில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்தல், சன் டிவியில் ராடன் மீடியா மூலம் சீரியல்களை தயாரித்தல், சினிமா படங்களை தயாரித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்த ராதிகா திடீரென அரசியல் ஆர்வம் காட்டுவதற்கும், விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கும் உண்மையான காரணங்கள் என்னவென்று இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

- Advertisement -

அதாவது, நடிகை குஷ்பு 1985க்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தவர். தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமான அவர், பல முக்கிய ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். டைரக்டர் சுந்தர் சியை திருமணம் செய்த அவர், சினிமாவில் மார்க்கெட் குறைய துவங்கி பின், திமுகவில் சேர்ந்தார். பிறகு காங்கிரஸ் கட்சிக்கு போனார். இப்போது பாஜகவில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். ராதிகாவின் திடீர் அரசியல் பிரவேசத்துக்கு நடிகை குஷ்புதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவை பொருத்த வரை, ராதிகா தான் சீனியர். குஷ்பு ஜூனியர்தான். ஆனால் குஷ்பு பாஜகவில் இருந்து இதுவரை கமிஷனாக மட்டுமே ஒரே ஆண்டில் ரூ. 100 கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டதாக கூறப்படுகிறது. உனக்கு சீனியர் நான், உன்னை விட அதிகமாக சம்பாதித்து காட்டுகிறேன் என்ற ஆவேசத்தில்தான், ராதிகா இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்