- Advertisement -
வணக்கம் சென்னை காளி காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி கூறியிருப்பதாவது, மனிதர்கள் அறிவியல் வளராத காலத்தில் இயற்கையையும் நோய்களையும் கண்டு பயந்து மதத்தையும் கடவுளையும் உருவாக்கினார்கள். ஆனால் இன்று அறிவியல் இவ்வளவு வளர்ந்த பிறகு அர்த்தமற்ற சடங்குகள் குறித்து நீதிமன்றங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க மனிதர்களின் இந்த விசித்திரமான சண்டைகளும் சக்கரவுகளுமே சாட்சி. பரிணாம வளர்ச்சியின் போது மூளையில் ஏற்பட்ட குறைபாட்டால் தான் மனிதர்கள் இன்றும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.





