- Advertisement -
சண்டியர் பட தலைப்பு குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, முன்பு கடும் எதிர்ப்பு வந்தபோது சண்டியர் தலைப்பை கைவிட்ட கமல்ஹாசன் தற்போது மீண்டும் அதே தலைப்பை பயன்படுத்துவது அவரது அகந்தையை காட்டுகிறது. சண்டியர் போன்ற சொற்கள் சாதிய மோதல்களையும் வன்முறையையும் ஆதிக்க மனோபாவத்தையும் தூண்டக்கூடியவை. இதே பெயருடன் படம் வெளி வந்தால் நடிகர் கமல்ஹாசன் தமிழ்நாட்டை விட்டு அடிக்கடி வெளியேறும் சூழல் ஏற்படும். அதாவது அவர் தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உருவாகும் என்று கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார். இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதாக அவர் கூறியிருக்கிறார்.





