நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராயன். கடந்தாண்டில் ஜூலை மாதம் இந்த படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த படமாகும். இது தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டில் வெளியாகி ரூ. 100 கோடி வசூலித்த 8 தமிழ் படங்களில் ராயன் படமும் ஒன்றாகும்.
இந்த படத்தில் தனுஷூடன் சந்தீப் கிஷன் காளிதாஸ் ஜெயராம் துஷாரா விஜயன் பிரகாஷ்ராஜ் செல்வராகவன் எஸ்ஜே சூர்யா வரலட்சுமி சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். பாஸ்ட் புட் ஓட்டல் நடத்தும் கேரக்டரில் மொட்டையடித்த கெட்டப்பில் தனுஷ் நடிப்பும் இயக்கமும் வேற லெவலில் இருந்தது.
ராயன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை என 2 படங்களை இயக்கினார். ஆனால் இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி தோல்வியடைந்தது. நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி ரிலீஸ் என அறிவித்தனர். பிறகு அந்த நாளில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி ரிலீஸ் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டனர். அதே போல் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ராஷ்மிகா மந்தனா நடித்த குபேரா படமும் ரிலீஸ் தள்ளி போய் விட்டது.
இந்த சூழலில் நடிகர் தனுஷ் இளையராஜா பயோபிக் கதையில் நடிக்கும் படம் ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது. அத்துடன் இந்தியில் தேரே இஸ்க் மெயின் என்ற படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். அத்துடன் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அவர் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இப்போது முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கதையில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபாஸ் நடித்த ஆதி புருஷ் படத்தின் இயக்குனர் ஓம் ராவத் இயக்க உள்ளார். மேலும் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1ம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதையாவது குறிப்பிட்ட தேதியில் நடத்துவார்களா, தள்ளி வைப்பார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





