- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 5 லட்சம் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபல சீரியல் நடிகர் -...

ரூ. 5 லட்சம் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபல சீரியல் நடிகர் – சக பெண் போட்டியாளரின் டார்ச்சர்தான் காரணமா?

- Advertisement -

விஜய் டிவியில் இம்மாதம் 6ம் தேதி தமிழ் பிக்பாஸ் சீசன் 10 போட்டி துவங்கி 3 வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல சண்டை சச்சரவு பிரச்னைகள் என பிக்பாஸ் வீட்டுக்குள் பரபரப்புக்கும் சலசலப்புக்கும் பஞ்சம் இல்லை. அடிக்கடி புதிய டிவிஸ்ட்டுகளை பிக்பாஸ் செய்து பார்வையாளர்களை அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் திரும்ப அனுப்பப்பட்டனர். ஜாவித், சாவின்யா மற்றும் லட்சுமி பிரியா மீண்டும் வீட்டுக்குள் சென்ற போது அவர்கள் கையில் நீளமான ரிப்பன் தரப்பட்டு சக போட்டியாளரை கையுடன் பிணைத்துக்கொண்டு ஒரு வாரம் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்பட்டது.

- Advertisement -

அதன்படி லட்சுமிபிரியா குமரன் கையிலும் ஜாவித் தன்யா கையிலும் சாவின்யா அஸ்மிதா கையிலும் அந்த ரிப்பனை மாட்டி விட்டனர். அதன்படி இந்த 3 பேருடன் அவர்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாத பட்சத்தில் கயிறை அவிழ்த்துவிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடலாம் என்றும் பிக்பாஸ் விதிமுறையாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் லட்சுமிபிரியா, குமரன் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் நீடித்து வந்தது. குமரன் வீட்டில் இருப்பதே தெரியவில்லை. அவரது பங்களிப்பு எதுவுமே இல்லை என்று லட்சுமி பிரியா விமர்சித்த நிலையில், வீட்டை விட்டு வெளியே போயிட்டு வந்த நீங்க என்னை எப்படி விமர்சனம் செய்யலாம்? என்று குமரனும் பதிலுக்கு அவரிடம் பேசிய நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த சூழலில், சக போட்டியாளரின் டார்ச்சர் காரணமாகவும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க விரும்பாத நிலையில் குமரன் ஒரு அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார். அதன்படி அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. லட்சுமி பிரியா கையில் கட்டியிருந்த ரிப்பனை கழட்டிய அவர் வீட்டில் இருந்து ரூ. 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்த வரை ஆரம்பத்தில் சில சீசன்கள், போட்டியை மட்டுமே மையப்படுத்தி நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் கடந்த சில சீசன்களாகவே போட்டியாளர்களுக்குள் ஏற்படும் பகைமை உணர்வை மையப்படுத்தியே நிகழ்ச்சி செல்கிறது. இதில் தனிப்பட்ட முறையில் மனித உரிமை மீறல் மானம் மரியாதை அவமானம் களங்கம் ஏற்படுத்துகிற நிலையில், போட்டியாளர்கள் விரக்தியில் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறும் மனநிலைக்கு மாறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்