- Advertisement -
Homeபொழுதுபோக்குகுக் வித் கோமாளி சீசன் 4.. டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி சீசன் 4.. டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம். சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜுனியர், கலக்கப்போவது யாரு என அந்தப் பட்டியல் நீளும். விஜய் டிவியின் ஷோக்களுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்துதான் மற்ற சேனல்கள் ரியாலிட்டி ஷோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

இப்படி விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் அண்மைக்காலமாக சென்சேஷனல் ஷோவாக மாறியிருப்பது குக் வித் கோமாளி. சமையல், நகைச்சுவை கலந்து நடக்கும் அந்த ஷோவுக்கென்று தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கல் மத்தியில் பயங்கர மவுசு இருக்கிறது. ஒவ்வொரு எபிசோடும் அவ்வளவு ரகளையாக நகரும் என்பதால் அதை பார்த்தால் ஸ்ட்ரெஸ் எல்லாம் தொலைந்துபோகிறது போன்ற கருத்துக்களும் எழுந்திருக்கின்றன. மேலும் இதில் தோன்றிய பிறகுதான் புகழ் நடிகர் புகழாக சினிமாவில் புகழ் பெற்றார். அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான ஷோவாக இருக்கிறா குக் வித் கோமாளி.

- Advertisement -

இதுவரை குக் வித் கோமாளியில் மூன்று சீசன்கள் நடைபெற்றிருக்கின்றன. மூன்று சீசன்களுக்குமே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கின்றன. அதனையடுத்து நான்காவது சீசன் தொடங்கியது. இதில் பிக்பாஸ் புகழ் ஷெரின், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் அய்யப்பா, விசித்ரா, கல்யாண், ஆண்ட்ரியான் நௌரிகட், மைம் கோபி, விஜய் விஷால், சிவாங்கி, கிஷோர் என மொத்தம் பத்து பேர் பங்கேற்றனர்.

பல சுற்றுக்களாக நடைபெற்றுவந்த குக் வித் கோமாளி இறுதிக்கட்டத்தை எட்டியது. அதன்படி ஷோவின் இறுதிச்சுற்றுக்கு மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விசித்திரா உள்ளிட்டோர் தகுதி பெற்றனர். இந்நிலையில் பரபரப்பாக நடந்த இறுதிச்சுற்றில் மைம் கோபி முதல் இடத்தையும், ஸ்ருஷ்டி டாங்கே இரண்டாவது இடத்தையும், விசித்திரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

- Advertisement -

முதல் இடத்தை பிடித்த மைம் கோபிக்கு ஐந்து லட்சம் ரூபாயும், இரண்டாம் பிடித்த ஸ்ருஷ்டி டாங்கேவிற்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் நடந்த மூன்று சீசன்களிலும் முறையே வனிதா விஜய்குமார், இயக்குநர் திருவின் மனைவி கனி, ஷ்ருதிகா ஆகிய மூன்று பெண்களே டைட்டிலை வென்றிருக்கின்றனர். தற்போது மைம் கோபி வென்றிருப்பதன் மூலம் குக் வித் கோமாளி டைட்டிலை வென்ற முதல் ஆண் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் அவர். மைம் கோபி மெட்ராஸ், உறியடி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்