தமிழ் சினிமாவில், பல நடிகர், நடிகையர் நண்பர்களாக இருக்கின்றனர். பல படங்களில் ஒன்றாக நடிக்கும்போது அவர்களுக்குள் ஏற்படும் பழக்கம், நாளடைவில் காதலாக மாறிவிடுகிறது. சிலர், திருமணம் செய்து கொள்கின்றனர். சிலரது காதல், சினிமா காதலை போலவே நிஜத்திலும் தோற்று போய்விடுகிறது.
சினிமாவில், அப்படி காதலித்தவர்கள் தான் பிரபு – குஷ்பு. சின்னதம்பி, மைடியர் மார்தாண்டன், கிழக்குகரை, உத்தம ராசா, பாண்டித்துரை என பல படங்களில் நடித்த போது, அவர்களுக்குள் ஆழமான காதலும், பரஸ்பர புரிதலும் இருந்துள்ளது.
ஆனால், பிரபு ஏற்கனவே திருமணம் என்பதாலும், பாரம்பரியான சிவாஜி குடும்பம் குஷ்புவை ஏற்க மறுத்ததாலும், அவர்கள் வாழ்வில் இணைய முடியவில்லை. அதற்கு பிறகு பிரபு – குஷ்பு படங்களில் இணைந்து நடிப்பதை தவிர்த்தனர்.
24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கின்னஸ் சாதனை படத்தில் கூட பிரபு, குஷ்பு நடித்திருந்தாலும் பிரபுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவும், குஷ்புவுக்கு ஜோடியாக சத்யராஜூம் நடித்திருந்தனர். ஆனால், இன்றளவும் சினிமாவில் சிறந்த ஜோடியாக ரசிகர்கள் ரசிப்பது பிரபு – குஷ்புவை ஜோடியை தான்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய குஷ்பு, தமிழில் நடிக்க வந்த புதிதில் எனக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. யாரிடம் எப்படி பேசுவது என்றும் தெரியாது. அப்போதுதான் பிரபு, எனக்கு நல்ல நண்பராக இருந்து, பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். தமிழில் ஆட்டோகிராப் போட கற்றுக் கொடுத்ததே அவர்தான்.
தமிழ் சினிமாவில் எனது முதல் நண்பர் பிரபுதான். படப்பிடிப்பு தளத்தில் யூனிட்டில் இருக்கும் லைட்மேன், டிரைவர்கள், தொழிலாளர்கள் என எல்லோரிடமும் சகஜமாக பேச வேண்டும். இல்லை என்றால், உன்னை பந்தா செய்கிற பெண் என தவறாக நினைத்து விடுவர், என்றார். அவர் அதை சொல்லாவிட்டால், எனக்கு பந்தா செய்கிற பெண் என்ற கெட்ட பெயர் வந்திருக்கும். தமிழ் சினிமாவில் நீ நிலைத்திருக்க வேண்டும் என்றால், தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னவரே பிரபுதான், என்று சொல்லி இருக்கிறார் பிரபு.





