- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து, உலகநாயகன் கமலின் ஆளவந்தான் - ரி ரிலீஸ் செய்த படங்களில்...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து, உலகநாயகன் கமலின் ஆளவந்தான் – ரி ரிலீஸ் செய்த படங்களில் இருவரில் வசூலில் முந்தியது இவரா?

- Advertisement -

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிக்கொண்டு இருப்பவர்கள். அதிலும் கடந்த 1990க்கு பிறகு அவர்களது பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. இன்றும் தமிழ் சினிமாவில் பிஸி நடிகர்களாக ரஜினி, கமல் இருந்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று 73வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த வயதிலும் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான ஜெயிலர் வசூலில் 525 கோடி ரூபாயை கடந்தது. இப்போது தசெ ஞானவேல் இயக்கும் ரஜினி 170 படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

அதே போல் நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில்தான் தனது 69வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இந்தியன் 3 இப்போது நடித்து வருகிறார். அடுத்து புராஜெக்ட் கே, தக்லைப் உள்ளிட்ட படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை இப்போது வரும் படங்களை விட கடந்த 20, 25 ஆண்டுகளுக்கு முந்தைய படங்களை பார்க்கும்போது அது கிளாசிக் படங்களாக இருக்கின்றன. அதனால் அந்த படங்களை அப்போது பார்க்க முடியாத ரசிகர்கள், குறிப்பாக 20கிட்ஸ் ரசிகர்களும் இப்போது அந்த படங்களை ஆச்சரியமாக பார்த்து ரசிக்கின்றனர்.

- Advertisement -

அதில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் – மீனா நடித்த முத்து படமும், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த ஆளவந்தான் படமும் அப்போதே மிக பரபரப்பாக பேசப்பட்ட, வெற்றி படங்களாக இருந்தன.

இம்மாதம் 8ம் தேதி முத்து மற்றும் ஆளவந்தான் படங்கள் ரி ரீலீஸ் செய்யப்பட்டுள்ளன. இதில் முத்து படம் ரூ. 7 லட்சம், ஆளவந்தான் படம் ரூ. 15 லட்சம் ரூபாயும் முதல்நாள் வசூலை அடைந்துள்ளன.அந்த வகையில் முதல் நாள் வசூலில் ரஜினியை கமல் முந்திவிட்டார் என்று தெரிகிறது. ஆளவந்தான் படத்தில் கடவுள் பாதி மிருகம் பாதியாக நடித்த நந்து கேரக்டருக்கு, தியேட்டரில் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்