- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கல் ரேஸிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய லால் சலாம்... இப்போ சொல்லி இருக்கிற தேதியிலேயாச்சும் வெளியாகுமா?...

பொங்கல் ரேஸிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய லால் சலாம்… இப்போ சொல்லி இருக்கிற தேதியிலேயாச்சும் வெளியாகுமா?…

- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு, அவர் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஜெயிலர் திரைப்படத்திற்கு முன்பே அவர் லைக்கா நிறுவனத்துடன் இரண்டு படங்களில் நடிக்க சம்மதித்தார். அதில் ஒரு திரைப்படத்தை, ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவே இயக்கினார்.

இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் மத அரசியலையும் இது பேசுவதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கு லால் சலாம் என பெயர் வைக்கப்பட்ட நிலையில், அதை ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்தனர்.

- Advertisement -

சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்தார். அவர் மொய்தீன் பாய் என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்தில் அவர் வரும் காட்சிகள் மிக முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தில் இருந்து டீசர் வெளியானது. அதில் ரஜினி பேசிய வசனங்கள் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில் லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் அயலான் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு தொடங்கிய சூழலில் பொருளாதார பிரச்சனை காரணமாக முடங்கி பின்னர் மீண்டது. குடும்ப ஆடியன்ஸ்கள் இதற்கு அதிகம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

- Advertisement -

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் சந்திப் கிஷன் உள்ளிட்டோ இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லர் ரசிகர் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இது போக அருண் விஜயின் மிசன் சாப்டர் ஒன்று திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொங்கல் ரேசிலிருந்து லால் சலாம் திரைப்படம் பின்வாங்குவதாக ஏற்கனவே தகவல் வெளியகி இருந்தது. அதன் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் முடிக்கப்படாததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், இந்த தேதியிலாவது வெளியாகுமா அல்லது படம் மீண்டும் தள்ளி போகுமா என்று இணையத்தில் கேள்வி எழுப்பி விடுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்