- Advertisement -
Homeபொழுதுபோக்குகுசேலன் படத்துல ரஜினி சொன்ன மாதிரியே நடந்து போச்சே, மொய்தீன் பாய்க்கு ரெஸ்பான்ஸ் அவ்ளோதானா? -...

குசேலன் படத்துல ரஜினி சொன்ன மாதிரியே நடந்து போச்சே, மொய்தீன் பாய்க்கு ரெஸ்பான்ஸ் அவ்ளோதானா? – காற்று வாங்கும் லால் சலாம் அரங்குகள்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வெளிவந்துள்ள படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இது அவருக்கு 3வது படம். ஏற்கனவே 3 என்ற படத்தையும், தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தையும் ஐஸ்வர்யா இயக்கி இருந்தார். இந்த இரண்டு பிளாப் படங்கள்தான்.

அதனால்தான், 3வது படத்திலும் அதே நிலை தொடரக்கூடாது என, மகளுக்கு ரஜினி களத்தில் இறங்கினார். ஏறக்குறைய 40 நிமிடங்களுக்கு மேல் ரஜினி வரக்கூடிய காட்சிகளும் இந்த படத்தில் வைக்கப்பட்டன. இந்த படத்துக்காக ரஜினி பெற்ற சம்பளமும் ரூ. 40 கோடி. ஆனால் படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பது இப்போது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

முதல் நாளில் கொல மாஸ், பட்டாசு கிளப்பியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய ரஜினி ரசிகர்களால், படம் பார்க்க சென்ற பொதுவான ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். ஏனெனில் இதில் வழக்கமான ரஜினியும் இல்லை. நடிகர் செந்தில், தம்பி ராமையா போன்றவர்களின் மொக்கையும் தாங்க முடியாமல் தவித்துள்ளனர்.

மத நல்லிணக்கம் குறித்து கருத்து கூறும் படம் எல்லாம் பார்க்க இப்போதைய ரசிகர்களுக்கு ஆர்வமில்லை. அதுவும் டாகுமென்டரி படம்போல, பின்னணியில் குரல் ஒலித்தபடி காட்சிகளை விளக்கும் படத்தை பார்க்கும் போது ஒரு கட்டத்தில் தியேட்டரில் கொட்டாவி சத்தம் பலமாக வருகிறது. படம் பார்த்தவர்கள் தரும் நெகட்டிவ் ரிசல்ட், அடுத்து படம் பார்க்க வருபவர்களை, ரிஸ்க் வேண்டாம் என்று தடுக்கிறது.

- Advertisement -

குசேலன் படத்தில், ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். நடிகர் அசோக்குமார் என்ற பெரிய ஸ்டார் நடிகரான தன்னை பார்க்க வரும் பள்ளி நிர்வாகிகளிடம், நானே நடிச்சிருந்தாலும், படம் நல்லா இருந்தா தான் ரசிகர்கள் படம் பார்ப்பாங்க. படம் நல்லா இல்லேன்னா, யாரும் பார்க்க மாட்டாங்க. இதுதான் உண்மை, என்று கூறியிருப்பார்.

அவர் சொன்ன அந்த வார்த்தைகளை உண்மையாக்குவது போல, லால் சலாம் படத்தில் ரஜினி நடித்திருந்தும் படம் நன்றாக இல்லாததால், இரண்டாம் நாளிலேயே பல தியேட்டர்களில் ஆளின்றி காற்று வாங்குகிறது. மொய்தீன் பாயாக வந்த ரஜினியை மேலும் உச்சாணி கொம்பில் ஏற்றி வைக்கும் அளவுக்கு ஜெயிலர் அனிருத் போல, பிஜிஎம் போடுவதில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் கோட்டை விட்டு விட்டாரே என ரஜினி ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்