கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதியானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமா உலகில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க எந்த நடிகை வந்தாலும் அவர் நிச்சயமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு அபரிமிதமான வரவேற்பையும் செல்வாக்கையும் பெற்றுவிடுகிறார். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் இயற்கையான அழகுடன் இருப்பதுடன் நல்ல நடிப்பாற்ற மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய உண்மை.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மயக்கம் என்ன என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ படங்களில் நடித்தார். பிறகு விஷாலுடன் சண்டக்கோழி 2, விக்ரமுடன் சாமி 2 ரஜினிகாந்துடன் அண்ணாத்தஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் கவனத்தையும் பெற்றார்.
தொடர்ந்து நடிகையர் திலகம் என்ற படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கேரக்டரில் நடித்து நல்ல அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. எனினும் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டில் நடிகை கீர்த்தி சுரேஷின் ஆண்டு வருமானம் குறித்த ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில ஆண்டுகளாக சொற்பமான எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்து விடுகிறார்.
நடப்பாண்டில் இதுவரை கீர்த்தி சுரேஷ் நடித்த 3 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தில் நடிக்க 2 கோடி முதல் மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.இந்நிலையில் அவரது கடந்த ஆண்டு வருமானம் 20 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டில் நடிகை கீர்த்தி சுரேஷின் மொத்த ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அவர் விளம்பர படங்களில் அதிகளவில் நடிக்கிறார். அவர் நடித்த விளம்பர படங்களின் மூலம் ஏகப்பட்ட வருமானம் அவருக்கு வருகிறது. அது மட்டும் இன்றி அவர் சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் அவரது போஸ்டர்கள் அதிகளவில் வைரலாகி அதன் மூலமாகவும் பல கோடி ரூபாய் அவருக்கு வருமானம் கிடைத்து வருகிறது என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் 125 கோடி கீர்த்தி சுரேஷ் வருமானம் ஈட்டி இருக்கிறார் என்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.





