நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தம்பி கார்த்தியும் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். மகன்கள் இருவரும் சினிமா துறையில் சாதிப்பது சிவக்குமாருக்கு சந்தோஷத்தை தந்து வந்தது.
ஆனால் திடீரென சென்னையில் கூட்டுக்குடும்பமாக வசித்த சூர்யா, ஜோதிகா மற்றும் குழந்தைகள், சிவக்குமார் குடும்பத்தை பிரிந்து மும்பையில் குடியேறிவிட்டனர். குழந்தைகளின் சிறந்த கல்விக்காக என ஜோதிகா தரப்பில் கூறப்பட்டாலும், அது சிறிதும் உண்மையில்லை என்பது பலரும் அறிந்த விஷயம்.
சென்னையில் மிக மிக தரம் வாய்ந்த கல்வி நிலையங்கள் இருக்கின்றன. மல்ட்டி மில்லியனர்ஸ் குழந்தைகள் படிக்கும் சகல வசதிகள் கொண்ட அதிநவீன கல்வி கூடங்கள் சென்னையில் உள்ள நிலையில், தரமான கல்வியை தேடி மும்பைக்கு செல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
சமீபகாலமாகவே, சிவக்குமார் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வதில் ஜோதிகா குறியாக இருந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம், மும்பையில் உள்ள தனது பெற்றோரை அடிக்கடி அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
அதே வேளையில், சமீபமாக மீண்டும் சினிமாவில் பல படங்களில் நடிக்கும் ஆசை ஜோதிகாவுக்கு வந்திருக்கிறது. ஏனெனில் இன்னும் அழகும், இளமையும் நிறைந்தவராக ஜோதிகா இருப்பதால் சினிமாவில் அடுத்த ரவுண்டு வரலாம் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். சினிமாவில் நடிக்க சூர்யா தடை சொல்லாத நிலையில், சிவக்குமார் தடை விதிக்கிறார். காரணம், வளர்ந்த பிள்ளைகள் உள்ள வீட்டில் மருமகள் சினிமாவில் நடிப்பது ஒரு மாமனாராக அவருக்கு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி உரிமையாளராக சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஒரு சூதாட்டம். மும்பையில் அதுதான் முக்கியமாக நடக்கிறது. எதற்காக இந்த சூதாட்ட விளையாட்டுக்கு உரிமையாளராக சூர்யா போக வேண்டும். இதற்கு காரணம் ஜோதிகா தான். அவர்தான் சூர்யாவின் அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருக்கிறார் என ஏகப்பட்ட கோபத்தில் இருக்கிறார் அப்பா சிவக்குமார். எனினும் அப்பாவை சமாதானப்படுத்த தம்பி கார்த்தி மூலம் தூது அனுப்பிக்கொண்டு இருக்கிறார் சூர்யா.





