- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெகவுக்கு பெருகி வரும் மக்கள் செல்வாக்தை பொறுக்க முடியலையா? - ஆளும்கட்சி தமிழக மக்கள் தக்க...

தவெகவுக்கு பெருகி வரும் மக்கள் செல்வாக்தை பொறுக்க முடியலையா? – ஆளும்கட்சி தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள், நடிகர் விஜய் ஆவேசம்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தொடர்ந்து ஆளுங்கட்சி திமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். வருகிற சட்டசபை தேர்தல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டியே என்று தனது மேடைப் பேச்சுகளில் தொடர்ந்து கூறி வருகிறார். இது திமுகவினர் மத்தியில் பயங்கர எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே அவ்வப்போது ஆளுங்கட்சி திமுக தரப்பில் தவெகவினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அக்கட்சியினர் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இப்போது திமுக அதிமுக வினர் மத்தியில் உள்ள மோதலை விட திமுக தவெகவினர் மத்தியில் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்தத் தாக்குதலில், 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் 6 பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என்று தனது பதிவில் தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்