- Advertisement -
Homeபொழுதுபோக்குகுருவை மிஞ்சும் சிஷ்யனாக மாறிய இயக்குனர் அட்லி, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அல்லு அர்ஜூன்...

குருவை மிஞ்சும் சிஷ்யனாக மாறிய இயக்குனர் அட்லி, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அல்லு அர்ஜூன் படம் குறித்த அவரது பிளான் – கேட்கவே பிரமிப்பா இருக்குதே?

- Advertisement -

தமிழில் ராஜா ராணி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. ஆர்யா நயன்தாரா ஜெய் நஸ்ரியா சத்யராஜ் சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தமிழில் 4 படங்களை இயக்கி அந்த 4 படங்களுமே பெரிய வெற்றியை பெற்றது. வசூலை வாரிக் குவித்தது. இயக்குனர் அட்லிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய இமேஜ் உருவானது. இந்த சூழலில் பதான் படத்தின் மாஸ் ஹிட்டுக்கு பிறகு, தனது அடுத்த படத்தை இயக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அட்லிக்கு அழைப்பு விடுத்தார்.

- Advertisement -

அதனால் பாலிவுட்டுக்கு சென்ற இயக்குனர் அட்லி, ஜவான் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன் நயன்தாரா விஜய் சேதுபதி பிரியாமணி யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த நிலையில் இந்த படம் ரூ. 1150 கோடி ரூபாய் வசூலித்து பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து சல்மான்கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்க அட்லியிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த சூழலில் சென்னையில் ரூ. 40 கோடி செலவில் புதிய அலுவலகம் திறந்த இயக்குனர் அட்லி, உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டு விசேஷங்களில் கலந்துக்கொள்ளும் முக்கிய விருந்தினராக மாறியிருக்கிறார். அட்லி அவர் இயக்கும் படத்துக்கு சம்பளமாக ரூ. 100 கோடி வரை கேட்கிறார்.

- Advertisement -

ஆனால் அவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இன்று குருவையே மிஞ்சும் சிஷ்யனாக பாலிவுட்டில் அசத்திக்கொண்டு இருக்கிறார். ஆனால் ஷங்கர் இந்தியன் 2 கேம் சேஞ்சர் போன்ற தோல்வி படங்களை தந்துக்கொண்டு பின்தங்கியுள்ளார். இந்த சூழலில் அட்லி, அடுத்ததாக பெரிய பிளான் ஒன்றை செயல்படுத்த துவங்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் 22வது படத்தை இயக்குனர் அட்லி டைரக்ட் செய்கிறார். இது அட்லி இயக்கும் 6வது படமாகும். அறிவியல் புனைவு கதையாக உருவாகும் இந்த படத்தை 2 பாகங்களை எடுக்க இயக்குனர் அட்லி திட்டமிட்டுள்ளார். வரும் 2027ம் ஆண்டில் வௌியாகும் இந்த படம் ரூ. 2000 கோடிக்கு மேல் வசூலிக்கும் அளவுக்கு படத்தை உருவாக்க அட்லி பிளான் செய்துள்ளார். ஏற்கனவே அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் ரூ. 1800 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்