- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோக்கள்தான் அப்படி என்றால் இவர்களுமா? சூர்யா 45 படத்தில் பணிபுரிய சம்பளம் சொல்லி மிரட்டிய ஒளிப்பதிவாளர்...

ஹீரோக்கள்தான் அப்படி என்றால் இவர்களுமா? சூர்யா 45 படத்தில் பணிபுரிய சம்பளம் சொல்லி மிரட்டிய ஒளிப்பதிவாளர் – கலங்கிப் போன இயக்குனர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளம் என்பது தாறுமாறாக இருந்து வருகிறது. 100 ரூபாய், 500 ரூபாய் என்பதே சாதாரண மக்களின் வரவு செலவுகளில் பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில், பிரபல நடிகர்களின் சம்பளம் ஒரு படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் என்று மிரள வைக்கிறது. 2ம் நிலை நடிகர்களின் சம்பளமும் ரூ. 20 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கிறது.

பிரபல நடிகர்களின் சம்பளத்தை போலவே இயக்குனர்களின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து விட்டது. பாகுபலி இயக்குனர் ராஜமௌலி, புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன், ஜவான் பட இயக்குனர் அட்லி போன்றவர்கள் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்களின் சம்பளம் ரூ. 50 கோடி என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போல் இசையமைப்பாளர்களின் சம்பளமும் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. அனிருத் போன்றவர்கள் ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது. இப்படி ஹீரோக்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்களின் சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் 75 சதவீதத்தை பங்கிட்டு கொள்வதால்தான், தயாரிப்பாளர்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்தை இயக்குநர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது. கோயம்புத்தூரில் பல முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார். இன்னும் இந்த படத்துக்கான ஒளிப்பதிவாளர் நியமிக்கப்படவில்லை.

- Advertisement -

இயக்குனர் அட்லியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர், மெர்சல் படத்தில் பணிசெய்த ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவை சூர்யா 45 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் அணுகியுள்ளது. அவரது சம்பளம் ரூ. 4 கோடி என்று கூறிய நிலையில், அரண்டு போயுள்ளனர்.

இந்த ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் அவுட்டோர் ஷூட்டிங்கில் நூற்றுக்கணக்கான லைட்களை வைத்து ரூ. 16 கோடி தனியாக பில் வைத்தவராம். அதனால் லைட் செலவு ரூ. 10 கோடி, சம்பளம் ரூ. 4 கோடி என பில் வைத்தால் என்ன செய்வது என சூர்யா 45 தயாரிப்பு நிறுவனம் மிரட்சியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்