- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தில் நடிக்கப் போகும் 2 முக்கிய நாயகிகள், அதில் ஒருவர் கேஜிஎப் நாயகியா?...

ஜெயிலர் 2 படத்தில் நடிக்கப் போகும் 2 முக்கிய நாயகிகள், அதில் ஒருவர் கேஜிஎப் நாயகியா? போட்றா வெடிய… இன்னும் லேட்டஸ்ட் அப்டேட் நிறைய இருக்குது…!

- Advertisement -

இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை எடுத்து முடிக்க 13 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு ஒரு மாதம் என கால அவகாசம் கேட்டிருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

அதனால் ஜெயிலர் 2 படம், அடுத்த ஆண்டு ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு அல்லது அக்டோபரில் தீபாவளிக்குதான் ரிலீஸ் ஆகும் என்று தெரிய வந்துள்ளது. இதுவரை ரஜினி அவர் நடித்த எந்த படத்திலும் 2ம் பாகத்தில் நடிக்காத நிலையில், முதல் தடவையாக ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனால் இந்த படத்தை ஜெயிலர் முதல் பாகம் போலவே, 2ம் பாகமும் மாஸ் ஹிட் படமாக கொடுக்க வேண்டும். குறிப்பாக 1000 கோடி ரூபாய் வசூல் இலக்கையும் எட்ட வேண்டும் என்ற குறிக்கோளில் நெல்சன் திலீப்குமார் இருந்து வருகிறார். அதற்காக வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பை துவங்கி, அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் கேஜிஎப் படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். ஆனால் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஜெயிலர் படத்தில் நடித்த விநாயகம் ஒருவரை தவிர மற்ற முக்கிய நடிகர்கள் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், சுனில், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களும் இந்த 2ம் பாகத்தில் நடிக்கின்றனர்.

- Advertisement -

ஜெயிலர் படத்தில் காவலய்யா பாடல் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தவர் நடிகை தமன்னா. அந்த பாடலும் பாடல் காட்சியும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் ஜெயிலர் 2 படத்தில், தமன்னா இருப்பதே ரசிகர்களுக்கு பெரிய திருப்தியை தரும் என்பதால் அவருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயிலர் முதல் பாகத்தில் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய தமன்னா, படப்பிடிப்பு குழுவுக்கு சரியான ஒத்துழைப்பு தராமல் கால்ஷீட் தராமல் இழுத்தடித்தவர் என்றாலும், ரஜினியே காத்திருந்து அவருக்காக நடித்தார். எனினும் ஜெயிலர் 2 படத்திலும் தமன்னா இருந்தால் ரஜினியும் மகிழ்ச்சியடைவார் என்பதால் இந்த முறை தமன்னாவுக்கு அதிக காட்சிகள் தர நெல்சன் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

சற்று முன்