- Advertisement -
Homeபொழுதுபோக்குராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படம் - வரும் சுதந்திர தினத்தன்று...

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படம் – வரும் சுதந்திர தினத்தன்று விருந்து காத்திருக்கு… லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

சினிமா துறையில் வளர்ச்சி என்பது, கலைஞர்களின் அதிர்ஷ்டத்தை பொருத்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்தும் இன்னும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நடிகர்களாவே பலர் உள்ளனர். ஆனால் சில நடிகர்கள் தங்களது திறமையாலும், அதிர்ஷ்டத்தாலும் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து முன்னணி நிலைக்கு வந்து விடுகின்றனர்.

அவர்களில் மிக குறிப்பாக, சமீபத்திய அடையாளங்களாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். துவக்கத்தில் மெரினா, எதிர்நீச்சல், மனம்கொத்தி பறவை படங்களில் காமெடி ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், இன்று ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி விட்டார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 40 கோடி வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

அதே போல் சிவகார்த்திகேயனுடன் பல படங்களில் காமெடி நண்பனாக வலம் வந்த நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு,அவரது இமேஜூம் வேற லெவலுக்கு வந்துவிட்டது. கருடன் படத்துக்கு கிடைத்த வரவேற்பும், வசூலும் அவரை முன்னணி நாயகன் வரிசைக்கு கொண்டு வந்துவிட்டது. அவரது கொட்டுக்காளி, விடுதலை 2 படங்களை எதிர்பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரவிக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சிவகார்த்திகேயனின் படம் அயலான். எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் தராத நிலையில், இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அமரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிங்கநடை என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமரன் படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல், பர்ஸ்ட் சிங்கிள் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேஜர் முகுந்த் வரதராஜன் ராணுவ வீரரின் வாழ்க்கை கதை என்பதால், சுதந்திர தினத்தன்று இந்த பாடல் வெளியாவது, ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்