- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னால் கொழுத்த வருமானம் போய் விடுமே என பயந்தாரா சூப்பர்...

விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னால் கொழுத்த வருமானம் போய் விடுமே என பயந்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்? – விஜய் அறிக்கையால் வெடித்தது சர்ச்சை!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி இருக்கிறார். லியோ படத்துக்கு பின், அவரது நடிப்பில் உருவான தி கோட் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதைத் தொடர்ந்து தனது 69வது படத்தில், இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த சூழலில், நடிகர் விஜய் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். துவக்கத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து, இன்று ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 சம்பளம் வாங்கும் அளவுக்கு அவரது இமேஜ் டாப் லெவலில் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்லும் அளவுக்கு, ரஜினியுடன் போட்டியாக சொல்லும் அளவுக்கு சிகரம் தொட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 22ம் தேதி, நடிகர் விஜய் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடினார். கள்ளக்குறிச்சி சம்பவத்தால், தமிழகமே அதிர்ச்சியில் உள்ள நிலையில், தனது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாட வேண்டாம் என்றும் தனது ரசிகர்களை, தவெக கட்சியினரை கேட்டுக்கொண்டார். அதனால் அன்றைய தினம் சமூக வலைதளங்களில் மட்டுமே விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்தபடி இருந்தது.

விஜய் பிறந்த நாளன்று, அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். சினிமாத்துறை சார்ந்தவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை கூறியிருந்தனர். குறிப்பாக நடிகர், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், திரிஷா, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை கூறி பதிவு செய்திருந்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை கூறியிருந்தனர். அவர்கள் அனைவரது பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.

- Advertisement -

ஆனால், நடிகர் ரஜினிகாந்த் மட்டும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறவில்லை. இது தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த போது பலரும் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், செய்தியாளர்கள் அதுகுறித்து கேட்ட போது, ஏதோ சம்பிரதாயமாக மட்டுமே ரஜினி, வாழ்த்துகள் வாழ்த்துகள் என கூறிவிட்டுச் சென்றார்.

இப்போது, விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லாமல், ரஜினிகாந்த் கவனமாக தவிர்த்திருப்பது, பல சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. விஜய் சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சனையில், ரஜினிக்கு இன்னும் அதிருப்தி குறையவில்லை. மேலும் சன் பிக்சர்ஸ் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால், விஜய்க்கு வாழ்த்து சொன்னால் அதனால் தனக்கு தொழில் சார்ந்த பாதிப்பு வருமோ, திமுக எதிர்ப்பு வருமோ என்று கூட ரஜினி பயந்துக்கொண்டு இதை தவிர்த்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்