- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ், இயக்குனர் எச் வினோத் கூட்டணியில் புதிய படம் ஷூட்டிங் எப்போது? - சுடச்சுட...

நடிகர் தனுஷ், இயக்குனர் எச் வினோத் கூட்டணியில் புதிய படம் ஷூட்டிங் எப்போது? – சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குபேரா. தெலுங்கில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவியது. அதற்கு முன்பு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் சரியான வரவேற்பின்றி தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து அடுத்ததாக நடிகர் தனுஷ் நடித்த இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் நடிகர் தனுஷ் டைரக்ட் செய்துள்ள 4வது படமாகும். ராயன் போலவே இட்லி கடை படமும் பெரிய வரவேற்பை பெறலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 13ம் தேதி சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் தனுஷ் தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படத்திலும் நடித்திருக்கிறார். அந்த படமும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இப்போது போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படமும் அடுத்து லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார்.

- Advertisement -

அதன்பிறகு மாரி செல்வராஜ் வெற்றிமாறன் எச் வினோத் ஆகிய படங்களிலும் நடிக்க நடிகர் தனுஷ் நடிக்க கமிட் ஆன நிலையில், இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் விக்னேஷ் ராஜா படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

அதைத் தொடர்ந்து தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்த 2 படங்களுக்கும் அவர் தலா 3 மாதங்கள் வீதம் 6 மாதங்கள் கால்ஷீட் ஒதுக்கிய நிலையில் வருகிற மார்ச் மாதம் துவங்கும் புதிய படப்பிடிப்பில் எச் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆக எச் வினோத் தனுஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 2026ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ளது. அதன்பிறகு மாரி செல்வராஜ், வெற்றிமாறன் படங்களில் நடிகர் தனுஷ் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்