எல்லா தொழில்களிலும், வியாபாரங்களிலும் போட்டி இருக்கிறது. குண்டூசி விற்பதாக இருந்தாலும், விமானம் விற்பதாக இருந்தாலும் தொழில் போட்டி இல்லாத துறை எதுவுமே இல்லை. அரசியல், சினிமாவிலும் அதிகளவில் போட்டி இருக்கிறது. சினிமா, அரசியலில் ஒருவருக்கு இருக்கும் செல்வாக்கை சரிக்க, அவரது இமேஜை காலி செய்வதுதான் முதல் வேலையாக இருக்கிறது.
இந்தி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் வித்யுல் ஜம்வால். இவர் தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஸ்லீப்பர் செல் எனப்படும் தேச விரோத கும்பலின் தலைவனாக நடித்திருந்தார். வித்யுல் ஜம்வால் நடிப்பு வேற லெவலில் இருந்தது. துப்பாக்கி படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த படத்துக்கு பிறகு, நடிகர் சூர்யாவுடன் அஞ்சான் என்ற படத்திலும் வித்யுல் ஜம்வால் நடித்திருந்தார். இந்த படத்தில் ரவுடித்தனம் செய்யும் சூர்யாவின் நண்பராக அவர் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் வில்லனால் அவர் கொலை செய்யப்படுவார். அதற்கு பின், சூர்யா தன் நண்பனை கொன்றவர்களை பழிவாங்குவதுதான் இந்த அஞ்சான் படத்தின் கதை.
மேலும், இப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சிங்கநடை படத்திலும், வித்யுல் ஜம்வால் வில்லனாக நடிப்பதாக தெரிய வந்துள்ளது. வித்யுல் ஜம்வால் நடிகராக மட்டுமின்றி படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அந்த வகையில் ஐபி 71, கிராக் ஆகிய படங்களை அவரே சொந்தமாக தயாரித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களிலும் அவரே நடித்து அந்த படங்களை தயாரிக்கவும் செய்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்து, பல கோடிகள் ரூபாய் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. பாக்ஸ் ஆபிசில் இந்த படங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தில், வித்யுல் ஜம்வால் பலத்த ஏமாற்றத்தை சந்தித்தார்.
இந்நிலையில் படங்களை தயாரித்த வகையில் மாபெரும் அளவில் நஷ்டமடைந்த நடிகர் வித்யுல் ஜம்வால், சினிமாவை விட்டு விலகி சர்க்கஸ் ஒன்றில் பணிசெய்வதாக இணையத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் தந்துள்ள வித்யுல் ஜம்வால், அந்த சர்க்கஸ் அட்ரஸ் இருந்தால் எனக்கு அனுப்புங்கள். அங்கே சென்று பார்க்கிறேன், என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதன்மூலம், தன்னை பற்றிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.





