- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரமாண்டமாக உருவாகி வரும் காந்தாரா 2 - லேட்டஸ்ட் அப்டேட் கேட்டா தலையே கிர்ர்ர்ன்னு சுத்துதே…...

பிரமாண்டமாக உருவாகி வரும் காந்தாரா 2 – லேட்டஸ்ட் அப்டேட் கேட்டா தலையே கிர்ர்ர்ன்னு சுத்துதே… – தரமான சம்பவமா இருக்கே ப்ரோ?

- Advertisement -

இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டி, நடக்காத விஷயத்தை நடப்பது போல காட்டி ஒரு போலியான திட்டமிட்ட நாடகமாக தான் சினிமா இருக்கிறது. ஒரு இயக்குனர் செய்யும் கற்பனையை நடிகர், நடிகைகள் நடிப்பில் நிஜமாக்கி திரையில் காட்சிப்படுத்துகின்றனர். அதை உருவாக்க தேவையான முதலீட்டை தயாரிப்பாளர் செய்கிறார்.

சினிமாவில் எதுவுமே உண்மை இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் திரையில் ஆடும் பேசும் வெறும் பிம்பங்களை பார்த்துவிட்டு நடிகர்களை கொண்டாடுவதும் இயக்குனர்களை பாராட்டுவதும் சினிமா என்ற கலைக்கு தரும் மரியாதை தானே தவிர, அங்கு உண்மையில் எதுவுமே அப்படி இல்லை என்பதை ரசிகர்கள் புரிந்துக்கொள்வது மிக அவசியமாகிறது.

- Advertisement -

ஆனால் அதே நேரத்தில் காந்தாரா போன்ற படங்களை பார்க்கும்போது அதை வெறும் கற்பனையாக மட்டுமே கருத முடியவில்லை. குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸில் வரும் ஆவேசம் நிறைந்த பக்தி காட்சிகளை பார்க்கும்போது படம் பார்க்கும் ரசிகர்களுக்குள் ஒரு அதிர்வும் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை

குறிப்பாக வினோதமான குரலில் கூச்சலிட்டபடி ரிஷப் ஷெட்டி ஆவேசமாக எதிரிகளை துவம்சம் செய்வதும் இறுதியில் சுவாமி அலங்காரத்தில் வந்து இறுதியில் காணாமல் போவதும் சினிமாவாக இருந்தாலும் அதையும் கடந்த ஒரு புரிதல் நிலையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியதால் தான் அந்த படம் பெரிய அளவில் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றது.

- Advertisement -

இப்போது காந்தாரா படத்தின் 2ம் பாகம் தயாராகி வருகிறது. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விடும். போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங் இப்போது கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹெரூர் என்ற கிராமத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போது இதில் ஒரு போர்கள காட்சி படம்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் சண்டை கலைஞர்களாக 500 பேர் பங்கேற்று சண்டை செய்யும் காட்சிகள் நடந்து வருகின்றன. படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ ரிஷப் ஷெட்டி இந்த காட்சிகளை படமாக்கி வருகிறார். படத்தில் இதுபோல பல பிரமாண்ட காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்