தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. தெலுங்கில் அவர் நடித்த அருந்ததீ பாகுபலி போன்ற படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. அதிலும் பாகுபலி படத்தில் தேவசேனை என்ற கேரக்டரில் அனுஷ்கா நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படம் இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
தமிழில் வேட்டைக்காரன் வானம் ரெண்டு லிங்கா இஞ்சி இடுப்பழகி தெய்வத் திருமகள் அலெக்ஸ் பாண்டியன் சிங்கம் சிங்கம் 2 சிங்கம் 3 தாண்டவம் தோழா என பல படங்களில் நடித்த அனுஷ்கா அழகிலும் நடிப்பிலும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிய அளவில் பாராட்டப்பட்டார். அவரது நடனமும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் பருமன் கேரக்டரில் நடித்த அனுஷ்காவின் உடல் எடை பிறகு குறையவே இல்லை. யோகா பயிற்சி பெற்ற அவர் யோகா தியானம் பயிற்சிகள் உணவு கட்டுப்பாடு இருந்தும் உடல் எடை குறையாமல் ஆண்ட்டி போன்ற தோற்றத்தில் காணப்பட்டதால் அடுத்து பட வாய்ப்புகள இல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த படம் காதி. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் விக்ரம் பிரபுவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. விஎப்எக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதமே காதி படத்தை வெளியிட இருப்பதாக படக் குழு அறிவித்தது.
ஆனால் அதற்குப் பிறகு வருகிற 11ம் தேதி காதி படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது வரும் 11ம் தேதி காதி படம் ரிலீஸ் ஆகாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் படமாக்கப்பட்ட சில காட்சிகள் திருப்தி இல்லை என்பதால் அந்த காட்சிகளை மீண்டும் ரீசூட் செய்ய இயக்குனர் கிரிஷ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
அதனால் காதி படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிடாமல் படக்குழு தள்ளி வைத்துள்ளனர். படத்தின் ரீ சூட் காட்சிகள் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகுதான் இந்த படம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அமேசான் பிரைமில் இந்த படத்தை வெளியிடும் தேதி முடிவான பிறகு தான், மீண்டும் காதி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது அனுஷ்கா ரசிகர்களை ஏமாற்றடைய செய்துள்ளது.





