இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் ரெட்ரோ. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த படம் கருப்பு. இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகின்றன.
கருப்பு படத்தில் திரிஷா ஷிவதா நட்டி நடராஜ் லப்பர் பந்து நடிகை சுவாசிகா யோகி பாபு மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களின் நடித்திருக்கின்றனர். படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமான கதைக்களத்தில் இருந்து மாறுபட்ட ஒரு களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
கருப்பண்ண சாமியை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களம் உருவாகியிருக்கிறது. கடவுள் அவதாரத்தில் வரும் நடிகர் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடிகர் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடித்திருந்தார்.
இதில் த செ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படம் பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றது. ஆனால் இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக பெரிய வெற்றிப்படங்கள் இல்லாத நிலையில், கருப்பு படம் நிச்சயமாக அவருக்கு பெரிய வரவேற்பை வெற்றியைத் தரும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற 23ம் தேதியாகும். இந்த சிறப்பு நாளில் கருப்பு படம் குறித்த பல முக்கிய அப்டேட்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. குறிப்பாக கருப்பு படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று கூறப்பட்டாலும் இன்னும் அந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா அல்லது கிறிஸ்துமஸ் பொங்கல் என தள்ளி போகுமா என்ற குழப்பமும் சூரயா ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.
அதனால் வருகிற 23ம் தேதி படத்தின் நாயகன் நடிகர் சூர்யா பிறந்த நாளில் கருப்பு படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடப்பட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் கருப்பு படம் குறித்த இன்னும் சில முக்கிய விஷயங்களை சூர்யா பிறந்த நாளில் அப்டேட் செய்யவும் படக்குழு திட்டம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.





