தமிழ் சினிமாவில் இப்போது நடிகர் சூரி பிஸியான ஒரு நடிகராக மாறிவிட்டார். விடுதலை கருடன் விடுதலை 2 கொட்டுக்காளி மாமன் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சூரி தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படம் கடல் வாழ்க்கையை ஒட்டிய கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மீனவ வாழ்க்கையை சொல்லும் ஒரு வேறுபட்ட கதையில் நடிகர் சூரி இந்த முறை நடிக்கிறார். படம் முழுவதும் கடலிலும் கடலோர பகுதிகளிலும் எடுக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தொண்டி என்ற கடற்கரை பகுதியில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
ஒரு மீனவ கிராமம் போல சிறிய பகுதியாக உள்ள தொண்டியில் மண்டாடி படத்தில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மற்றும் படக்குழுவினருக்கு தங்குவதற்கு ஓட்டல், லாட்ஜ் போன்ற வசதிகள் இல்லை. அதனால் அங்குள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து நடிகர் சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடிகைகள் படக்குழுவினர் தங்கி வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகர் சூரி இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை. ஆனால் இரட்டை கெட் அப்களில் வருகிறார். ஒருவர் முகம் முழுக்க தாடியுடன் இருக்கும் கெட்டப்பிலும் மற்ற ஒருவர் தாடி இல்லாமல் கிளீன் சேவ் செய்த இளமையான தோற்றத்திலும் படத்தில் வருவதாக தெரிய வந்துள்ளது. அது பிளாஷ்பேக் காட்சியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் இப்போது நடிகர் சூரி தாடியுடன் இருக்கும் கெட்டப்பில்தான் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஒருவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளிவர உள்ளது. இதில் தமிழில் நடிகர் சூரி ஹீரோ என்றும் தெலுங்கில் வெளியாகும் படத்தில், தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர்தான் ஹீரோ என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால் உண்மையில் தமிழ் தெலுங்கு கன்னடம் என எல்லா மொழிகளிலும் நடிகர் சூரிதான் மண்டாடி படத்தின் ஹீரோ. அதில் வரும் வில்லன் தெலுங்கு நடிகர்தான். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தெலுங்கில் ஒரு ஹீரோ, தமிழில் ஒரு ஹீரோ என்று தவறான தகவல் பரவி வருகிறது. மண்டாடி படத்தின் ஒரே ஹீரோ நடிகர் சூரி தான் என்று படக்குழு தரப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.





