நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் ரிலீஸ் தேதியை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்னும் 8 நாட்களில் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. கங்குவா படத்தின் படுதோல்விக்கு பிறகு வெளியாகும் இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக சூர்யாவுக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர். படத்தில் நாயகியாக இப்போது டிரண்டிங்கில் உள்ள பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான கண்ணாடிப் பூவே கனிமா ஏ ஒன் என 3 பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. டிரெய்லரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
அதனால் ரெட்ரோ படம் நிச்சயமாக நடிகர் சூர்யாவுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று உறுதியாக ரசிகர்கள் நம்புகின்றனர். மேலும் இந்த படத்தில் இலங்கை தமிழர் குறித்து கான்ட்ரவர்சியான காட்சிகள் வசனங்கள் எதுவும் இல்லை என தகவல் பரவிய நிலையில் அப்படி எந்த ஒரு விஷயமும் படத்தில் இல்லை என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நடிகர் சூர்யா நடித்து வரும் 45வது படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் 45வது படம் இது. இதில் நடிகை திரிஷா நாயகியாக நடிக்கிறார். மேலும் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா ஷிவதா மன்சூர் அலிகான் நட்டி நடராஜன் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அய்யனார் சுவாமி கதைக்களத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்க்கு சொல்லப்பட்ட இந்த கதையில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். மேலும் இந்த படம் மூக்குத்தி அம்மன் படம் போல ஆண் தெய்வம் பற்றிய கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 6 மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் இப்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று முதல் 5 நாட்களுக்கு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை இயக்குனர் ஆர்ஜே பாலாஜி படமாக்கி வருவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடித்த முக்கிய கேரக்டர்கள் அனைவரும் இந்த 5 நாட்கள் பட்பபிடிப்பில் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது.





