- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44, படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கொடுத்த சூப்பர் அப்டேட்...

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44, படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கொடுத்த சூப்பர் அப்டேட் – இந்த படமாவது சூர்யாவுக்கு கை கொடுக்குமா?

- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் கங்குவா. நேற்று முன்தினம் வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் பிரமாண்டம், மேக்கிங், நடிப்பு எல்லாம் சிறப்பாக இருந்தாலும் படத்தில் கதை திரைக்கதை இல்லாததால் பெரிய விமர்சனத்தில் சிக்கி விட்டது.

அதிலும் படம் குறித்து பிரமோசனில் எல்லை மீறி தரப்பட்ட பில்டப்புகளும் படத்தின் படுதோல்விக்கு காரணமாகி விட்டது. எப்போதுமே ஒரு படைப்பு தான் அதன் தகுதியை பேச வேண்டுமே தவிர, அதை உருவாக்கிய படைப்பாளி எப்போதுமே பேசக்கூடாது. கடைசியில் அது காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற ரீதியாக போய் விடும்.

- Advertisement -

அப்படிதான் சூர்யா பேசிய வார்த்தைகள் இப்போது ட்ரோல் ஆகி வருகின்றன. படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்றார். படத்தை வாய் பிளந்து பார்ப்பார்கள் என்றார். கடைசியில் படத்தை காதை பொத்திக்கொண்டு தான் பார்க்க வேண்டும். படம் முழுக்க கத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் திட்டுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நடிகர் சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சூர்யா 44 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னமும் படத்துக்கு டைட்டில் வைக்காமல் தாமதிப்பது சூர்யா ரசிகர்களையே விரக்தி அடைய செய்துள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தின் மாபெரும் தோல்விக்கு பிறகு, 2.5 ஆண்டுகள் கழித்து வெளியான கங்குவா படமும், நல்ல விமர்சனத்தை பெறவில்லை. அதனால் சூர்யா 44 படமாவது நடிகர் சூர்யாவின் மார்க்கெட்டை திரும்ப கொண்டு வருமா, தக்க வைக்குமா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான சூர்யா 44 படம், கேங்ஸ்டர் படம் இல்லை என்று ஏற்கனவே அவர் கூறியிருக்கிறார். தற்போது இதுகுறித்து படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கூறுகையில், இது கேங்ஸ்டர் படமில்லை. வித்யாசமான காதல் கதையில் உருவான படம். இந்த படத்தில் எனக்கும், சூர்யாவுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தில் எனக்கும் முக்கியமான ரோல் தரப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்