ரவி மோகன் என்கிற ஜெயம் ரவி நடித்த படம் கோமாளி. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். காஜல் அகர்வால் ஆர்ஜே ஆனந்தி யோகிபாபு கேஎஸ் ரவிக்குமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கேமியோ ரோலில் கடைசி காட்சியில் பிரதீப் ரங்கநாதனும் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார்.
இந்த படத்தை கடந்த 2019ம் ஆண்டில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 50 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பல ஆண்டுகள் கோமாவில் இருந்த ஹீரோ, அந்த காலகட்டதால் ஏற்பட்ட சமூக மாற்றங்களை கண்டு திகைத்து, அதை திரும்ப கொண்டுவர முயற்சிப்பதுதான் கதை.
இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த படம் லவ் டுடே. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இதில் இவானா சத்யராஜ் ராதிகா யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இளம் காதலர்கள் செல்போன்களை மாற்றிக்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்திய இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
இயக்குனராக, நடிகராக மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அடுத்து நடித்த படம்தான் டிராகன். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. வருகிற 21ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.
டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கேஎஸ் ரவிக்குமார் விஜே சித்து கௌதம் மேனன் மிஷ்கின் ஜார்ஜ் மரியன் கயாடு லோஹர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டு பிறகு, விடாமுயற்சி படம் காரணமாக 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் காதலை மையப்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், டிராகன் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 14 கோடிக்கு விலை பேசி வாங்கியுள்ளது. ஆடியோ உரிமம் ரூ. 6 கோடி, சாட்டிலைட் உரிமம் ரூ. 6 கோடி என இப்போதே ரூ. 26 கோடி ரூபாய் வருமானம் பார்த்துவிட்டது. இனி தியேட்டர்களின் மூலம் கிடைக்கிற வருவாய், ஓவர்சீஸ் விற்பனை என இந்த படம் பெரிய லாபத்தை தரப்போகிறது. ஒருவேளை படம் பெரிய ஹிட் ஆகிவிட்டால், விடாமுயற்சி படத்தை விட கணிசமான லாபம் அள்ளும் என மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.





