- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் ஓகே சொன்னால்தான் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பார், புறநானூறு படத்துக்கு வந்த...

அவர் ஓகே சொன்னால்தான் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பார், புறநானூறு படத்துக்கு வந்த திடீர் சிக்கல் – இத பத்தி யாருமே சொல்லலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களே மிக மிக குறைவுதான். அதிலும் சொற்பமான மிக சிலரே, நல்ல படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கின்றனர். அந்த வகையில் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் சுதா கொங்கரா. துரோகி படத்தை தவிர மற்ற 2 படங்களுமே அவருக்கு நல்ல புகழை பெற்றுத் தந்தது.

இந்நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று என்ற வெற்றிப் படத்தை சுதா கொங்கரா, மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி அமைத்து உருவாக்கப்பட்ட திட்டமிட்ட படம்தான் புறநானூறு. சிறுத்தை சிவாவின் கங்குவா படத்தை அடுத்து, சூர்யா புறநானூறு படத்தில்தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான புறநானூறு பட அறிவிப்பு விழாவும் நடத்தப்பட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் இந்த படத்தில் நடிக்க சூர்யா செய்த குறுக்கீடுகளால், படத்தையே சுதா கொங்கரா டிராப் செய்துவிட்டார். அதாவது இந்தி எதிர்ப்பு உண்மை சம்பவத்தை மையப்படுத்திய இந்த கதையில், இந்தி எதிர்ப்பு காட்சிகளை மழுங்கடிக்கும் விதமாக சூர்யா, திரைக்கதையில் சொன்ன திருத்தங்களால் சுதா கொங்கரா மிகவும் அதிருப்தியடைந்துள்ளார்.

இதனால் படத்தின் கதை, வேறு விதமாக செல்வதை புரிந்துக்கொண்ட அவர் இனி சூர்யாவை வைத்து இந்த படத்தை பண்ணவே முடியாது என்ற சூழலுக்கு வந்த பிறகே, படத்தை நிறுத்திவிடும் முடிவுக்கு வந்துவிட்டார். அதே நேரத்தில் இதே கதையை வேறு நடிகரை வைத்து இயக்கும் தீவிர முயற்சியிலும் சுதா கொங்கரா இருந்து வருகிறார். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகிய இரண்டு முன்னணி நடிகர்கள், சுதா கொங்கராவின் லைன் அப்பில் இருக்கின்றனர். இதில் அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள சிவகார்த்திகேயன், தி கோட் படம் நன்றாக போய்விட்டால், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவும், அது நடக்காமல் போனால், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25 வது படமாக புறநாதனூறு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு பிஸியான கால்ஷீட் ஷெட்யூலில் உள்ள தனுஷ், புறநானூறு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கிறது. வடசென்னை 2, ஆயிரத்தில் ஒருவன் 2, இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் 2 பாகங்கள் என, 2 ஆண்டுகளுக்கு அவர் பிஸியாக உள்ளார். எனினும் அவரது ஆடிட்டர் அக்பர் என்பவருக்கு, அவர் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் தந்துள்ளார். இன்னும் இயக்குனர் முடிவாகவில்லை. ஒருவேளை அக்பர் ஓகே சொன்னால், அவருக்கு தந்த கால்ஷீட்டில் சுதா கொங்கரா இயக்குனம் புறநானூறு படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளது.

சற்று முன்