- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் இயக்கத்தில் அடுத்து வரும் ரொமாண்டிக் படம்; லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி...

தனுஷ் இயக்கத்தில் அடுத்து வரும் ரொமாண்டிக் படம்; லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் – போடு வெடிய…

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இப்போது ஒரு படத்துக்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு அவரது இமேஜ், சினிமா மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்து வருகிறது. அதுவும் சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.

ராயன் படம் வெளியாகி இதுவரை 2 வாரங்களில் 130 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்திருக்கிறது. இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை குவித்த முதல் படம் ராயன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் தனுஷ் நடித்த படங்களில் ராயன் படம்தான் அதிக வசூலை பெற்றிருக்கிறது.

ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் ப பாண்டி என்ற படம் வெளியாகி, ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி வயது முதிர்ந்த காதலர்களாக நடித்திருந்தனர். இதில் இளம்வயது காதலர்களாக தனுஷ், மடோனா நடித்திருந்தனர். இந்த படம், தனுஷின் பக்குவப்பட்ட இயக்கத்தில் வெளியானது.

இப்போது 2வது படமாக தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன், அவரது நடிப்பில் வெளிவந்த 50வது படமாகும். இந்த படத்தை தொடர்ந்து, தனுஷின் இயக்கத்தில் 3வது படம் நிலவுக்கு மேல் என்னடி கோபம் படம் அடுத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, அஜீத்குமாரின் ரீல் மகளாக நடித்த அனைகா சுரேந்திரன் நடிக்கிறார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற இந்த படம், தனுஷ் இயக்கும் 3வது படமாகும். பிரியா பிரகாஷ் வாரியார், மேத்யூ தாமஸ், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ், ஆர்கே புரடக்சன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. 2கே கிட்ஸ்க்கு பிடித்த படமாக இந்த படம் ரொமாண்டிக் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், படத்தின் முதல் பாடலுக்கான கடைசி மிக்ஸிங் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சற்று முன்