- Advertisement -
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஓம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நடிகர் தனுஷூம் இந்த படத்தில் சில காட்சிகளில் போலீஸ் அதிகாரியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி வில்லன் கேரக்டரில் கார்பரேட் தாதாவாக நடித்திருக்கிறார். செம்மரக்கட்டை கடத்தல் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.தமிழில் அழகன் ஆனந்தம் மறுமலர்ச்சி மக்கள் ஆட்சி மௌனம் சம்மதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் மம்முட்டி இந்த முறை வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





