நடிகர் ரஜினிகாந்த் இன்னும் தமிழ் சினிமாவில் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். 73 வயதிலும் அவருடன் போட்டி போடும் அளவுக்கு வெற்றி நாயகனாக இருக்கிறார். பல நூறு கோடிகள் அவரது படங்களுக்கு வசூலாகிறது/ பல நடிகர்கள் முயன்றாலும் அவர்தான் வெற்றி பெறுகிறார். அதனால் இப்போதுமே அவர்தான் சூப்பர் ஸ்டாராக சினிமாவில் ஜொலிக்கிறார்.
ஆனால் ரஜினிகாந்த் வீட்டை பொருத்த வரை, நிர்வாகம் செய்வது அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தான், ரஜினியை யார் சந்திக்க வரவேண்டும், வந்தால் அவர் எத்தனை நிமிடங்கள் அங்கு இருக்க வேண்டும், ரஜினி எத்தனை நிமிடங்கள் அவருடன் பேச வேண்டும், வருபவர்களுக்கு டீ காபி கொடுப்பது வரை எல்லாமே தீர்மானிப்பது லதா ரஜினிகாந்த் தான்.
ரஜினிகாந்த், இதுபோன்ற விஷயங்களில் தன்னிசையாக முடிவெடுக்க கூடாது. லதா ரஜினிகாந்த் திட்டமிட்டபடிதான் அங்கு எல்லாமே நடக்க வேண்டும். ரஜினி வீட்டில் சந்திப்பவர்கள், அதிகபட்சம் 2 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை மட்டும்தான் பேச முடியும். அடுத்த நிமிடம் ரஜினி வீட்டுக்குள் சென்று விடுவார். பிறகு அவர் வர மாட்டார்.
இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பை கூட சிலர் வருவதை, வரக்கூடாது என்பதை லதா தான் தீர்மானிப்பார். ரஜினி அதில் தலையிட முடியாது. என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், வீட்டுக்குள் அவர் மனைவிக்கு கட்டுப்பட்ட கணவராக தான் ரஜினி நடந்துக் கொள்கிறார். எந்த விஷயத்திலும், லதாவை மீறி ரஜினி முடிவு எடுப்பதே இல்லை. தனுஷ் விஷயத்தில் கூட லதா முடிவுதான் இறுதியானதாக இருந்திருக்கிறது.
அதே போல், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் ரஜினி, செய்தியாளர்களின் கட்டாயத்தால் மட்டுமே, பேசுகிறார். அதுவும் ஓரிரு வார்த்தைகள்தான். அதிக நேரம் பேசினால், ஏதேனும் கேள்விக்கு ரஜினி கோபம் காட்டி கண்டபடி பேசி விடுவார் என்பதால், 30 நொடிகளுக்கு மேல் பத்திரிகையாளர்களிடம் பேசக்கூடாது என்பது லதாவின் ஸ்ட்ரிக்ட் உத்தரவாக இருக்கிறது.
அதே நேரத்தில் ரஜினிகாந்த், தனக்கு நெருங்கிய நண்பர்களை, சினிமா பிரபலங்களை சந்திக்க விரும்பினால் ராகவேந்திரா மண்டபத்துக்கு வரச்சொல்லி மணிக்கணக்கில் பேசி மகிழ்வதுதான் வழக்கம். அவர்களுடன் தன் கடந்த கால வாழ்க்கையை, கசப்பான அனுபவங்களை, மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துக்கொள்வார். அதே போல் இமயமலை சார்ந்த ஆன்மிக அனுபவங்களையும் பேசி இருக்கிறார். இந்த விஷயங்களை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ரஜினிக்கே வீட்டில் இப்படி ஒரு நிலைமையா? என அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.





