- Advertisement -
Homeபொழுதுபோக்குதர்மன் படவிழாவில் முகம் மாறிய சூப்பர் ஸ்டார், தயாரிப்பாளர் கமல்ஹாசன் இப்படி செஞ்சுட்டாரே? - அப்செட்...

தர்மன் படவிழாவில் முகம் மாறிய சூப்பர் ஸ்டார், தயாரிப்பாளர் கமல்ஹாசன் இப்படி செஞ்சுட்டாரே? – அப்செட் ஆன ரஜினி ரசிகர்கள்!

- Advertisement -

ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு தர்மன் என பெயர் வைக்கப்பட்டு இன்று சென்னையில் படப்பிடிப்பும் துவங்கி விட்டது.

நேற்று முன்தினம் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நடிகைகள் சிம்ரன் ராஷி கண்ணா மற்றும் இயக்குனர்கள் ஆர்கே செல்வமணி லிங்குசாமி, மகேந்திரன் செண்பகமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

- Advertisement -

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், நான் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பேசினாலும் பிரச்னை தான். பேசாவிட்டாலும் பிரச்னை தான். பேசினால் அப்படி பேசிவிட்டார் பார் என்கின்றனர். பேசாமல் இருந்தால் வாயில் என்ன கொழுக்கட்டையா என்றும் பேசுகின்றனர். பிடிக்காதவர்களுக்கு எது செய்தாலும் பிடிக்காதுதான் என்று ஆதங்கமாக பேசி வருத்தப்பட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மேடையில் இருந்த ரஜினிகாந்த் முகம் வழக்கமான கலகலப்பாக இல்லை. வழக்கமான அவரது மலர்ச்சி இல்லை. வேண்டா வெறுப்பாக ஒருவித அதிருப்தியுடன்தான் அவர் இருப்பதாக பலருக்கும் தோன்றியது. இப்படி ரஜினி முகம் மாறியதற்கு காரணம் என்னவென்று அவரது ரசிகர்கள் புலம்பினர்.இந்த நிலையில் அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில்தான் தர்மன் படம் உருவாகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் சிம்ரன் ராஷி கண்ணா மீனாட்சி சவுத்ரி என 3 நடிகைகள் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். நேற்று முன்தினம் காலை தர்மன் படத்தின் துவக்க விழா நடந்தது. அது எங்கு நடந்தது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் 10க்கு 10 என்ற அளவில் உள்ள சின்ன இடத்தில் இந்த துவக்க விழா நடந்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் முகத்தில் ஒரு ஏமாற்றமும் வருத்தமும் தெரிந்தது. இப்படிப்பட்ட ஒரு சிறிய இடத்தில் அந்த துவக்க விழா நடந்தது அவருக்கு பலத்த ஏமாற்றம் தந்துள்ளது. அது பிடிக்காததால் தான் அவர் முகம் வாடிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்