- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளருக்கு லீகல் நோட்டீஸ், யாரு...

இந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளருக்கு லீகல் நோட்டீஸ், யாரு அனுப்பியிருக்காங்கன்னு தெரியுமா? – இதென்னப்பா புது தலைவலியா இருக்குது…

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான படம் இந்தியன். மிகப்பெரிய அளவில் இந்த படம் வெற்றி பெற்றது. இந்தியன் தாத்தா சேனாபதி கேரக்டரில் நடித்த கமல்ஹாசனுக்கு 3வது முறையாக இந்தியன் படத்துக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இரட்டை வேடங்களில் இந்த படத்தில் கமல் நடித்திருந்தார்.

இந்த படத்தின் 2ம் பாகம் வெளிவரும் என, அந்த படத்தின் இறுதிக் காட்சியிலேயே இந்தியன் தாத்தா வெளிநாட்டில் இருந்து போனில் பேசுவது போன்ற காட்சியை, இயக்குனர் ஷங்கர் வைத்திருந்தார். அதே போல் இந்தியன் படம், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 இன்னும் சில தினங்களில் ரீலீஸ் ஆகிறது. அதே போல், இந்தியன் 3 படமும் 2025ம் ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியன் 2 படம் ரிலீஸ்க்காக காத்திருக்கும் நிலையில், அட்வான்ஸ்சுடன் வினியோகஸ்தர்கள் தங்களை தேடி வருவார்கள் என, படத்தின் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் லைகா புரடக்சன்ஸ் காத்திருந்துக் கொண்டுள்ள சூழலில், மஞ்சா வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து, அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியன் படம் பார்த்த ரசிகர்களுக்கு, அதில் இந்தியன் தாத்தா பயன்படுத்தும் வர்மக்கலை அந்த படத்தின் மிக சூப்பரான ரசிக்கும் முக்கிய விஷயமாக இருந்தது. 70 வயது முதியவர் இந்தியன் தாத்தா, யாரையும் வர்மக்கலை மூலம் தாக்கி அவர்களை செயல்பட விடாமல், சத்தமிட முடியாமல் செய்து, கத்தியால் குத்திக் கொல்வதுதான் அந்த படத்தில் ஹைலைட்டாக இருந்தது.

- Advertisement -

அந்த வர்மக்கலை குறித்து புத்தகம் எழுதியது இந்த ஆசான் ராஜேந்திரன்தான். அந்த புத்தகத்தை படித்துதான், இந்தியன் படத்தில் அந்த விஷயத்தையே டைரக்டர் ஷங்கர் கொண்டு வந்தார். அப்போது, பல விஷயங்களை நேரில் வந்து சொல்லிக்கொடுத்த வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன், கமலுக்கு விரலை மடக்கி நீட்டி, எப்படி அந்த வர்மக்கலையை செய்வதையும் பயிற்சி தந்து கற்றுக் கொடுத்திருக்கிறார். இதற்காக அவருக்கான சன்மானமும் அப்போது வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களிலும் அதே வர்மக்கலை விஷயத்தை பயன்படுத்திய நிலையில், தனக்கான அங்கீகாரத்தை இயக்குனர், தயாரிப்பாளர் தரவில்லை என அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஏனெனில் கமல் செய்யும் வர்மக்கலை முத்திரை இவரே பிரத்யேகமாக உருவாக்கியது என்பதால், இவரது அனுமதியின்றி அதை படத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த நோட்டீஸில் அவர் எச்சரித்துள்ளார். இதனால், டைரக்டர் ஷங்கர், தயாரிப்பாளர் பயங்கர அப்செட்டில் இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்