- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நான் நடிக்கிறேனா, வில்லன் கேரக்டரில் நான் ஏன் நடிக்கணும், ஆவேசப்பட்ட...

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நான் நடிக்கிறேனா, வில்லன் கேரக்டரில் நான் ஏன் நடிக்கணும், ஆவேசப்பட்ட நடிகர் விஷால் – என்ன ப்ரோ இப்படி கொந்தளிக்கிறீங்க?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். விஷால் ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். குறிப்பாக திமிரு, சண்டக்கோழி, துப்பறிவாளன், தாமிரபரணி, மலைக்கோட்டை உள்ளிட்ட அவரது பல படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் சமீபகாலமாக விஷால் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மட்டும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பு அரக்கன் என்று வர்ணிக்கப்படும் எஸ்ஜே சூர்யா மிக சிறப்பாக நடித்திருந்தார். அவர் இல்லாமல் விஷால் நடித்திருந்தால் இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருக்காது.

- Advertisement -

நடிகர் விஷாலை பொருத்த வரை சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அடிக்கடி ஏதேனும் கருத்துகளை சொல்லி, விமர்சனங்களை செய்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். நடிகர் விஜய் போலவே, சில நேரங்களில் தன்னை பெரிய நடிகராக அவர் செய்யும் அலப்பரைகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி பலரும் கிண்டல் செய்கின்றனர்.

அதுமட்டுமின்றி துப்பறிவாளன் படம் விஷாலின் திரை பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை தந்தது. அந்த படத்தின் இயக்குனர் மிஷ்கினுடன் விஷால் பிரச்னை செய்ததால் துப்பறிவாளன் 2 படமே நின்று போனது. இப்போது அந்த படத்தை நானே இயக்கி நடிக்கப் போகிறேன் என்று விஷால் கூறி வருகிறார். ஆனால் அந்த படத்தை இயக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை.

- Advertisement -

இந்த சூழலில், சுதா கொங்கரா இயக்கும் எஸ்கே 25 படத்தில், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக விஷால் நடிப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து நடிகர் விஷால் கூறியதாவது, வில்லனா, கண்டிப்பா நான் வில்லன் கேரக்டர்ல நடிக்க போறது இல்ல. நான் அடுத்து கமிட் ஆகியுள்ள படங்களில் நடிக்க உள்ளேன்.

நான் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற விமர்சனம் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என எனக்கு தெரியும். நான் இந்த நிலைமைக்கு வர 20 ஆண்டுகள் கடின உழைப்பை போட்டுள்ளேன். வில்லனாக நடிக்க இப்போது நான் தயாராக இல்லை என்று அவர் கோபமாக கூறியிருக்கிறார். அந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கமல்ஹாசனே வில்லனாக நடிக்கும் போது விஷால் நடிக்க ஏன் கோபப்படுகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்